உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் /  பிரட், பாலுக்கு அலையணும்!

 பிரட், பாலுக்கு அலையணும்!

பருவ மழைக் காலங்களில் சென்னை, வேளச்சேரியில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை, தொகுதியின் த.வெ.க., - எம்.எல்.ஏ.,வும், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான குமார் சமீபத்தில் ஆய்வு செய்தார். உடனிருந்த மாநகராட்சி, நீர்வளம், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கங்களின் நிர்வாகிகள், வெள்ள பாதிப்பு தடுப்புகள் குறித்து, ஆளாளுக்கு ஒரு ஆலோசனை கூறினர். இதனால் குழப்பம் அடைந்த அமைச்சர், ஐ.ஏ.எஸ்., அதிகாரி அதாப் ரசூலிடம், 'இவர்கள் கூறுவது எதுவும் புரியவில்லை; நீங்களே அவர்களிடம் பேசி, இறுதி முடிவு எடுத்து சொல்லுங்கள்; தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுகிறேன்' என கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார். இதை பார்த்த ஒரு முதியவர், 'விட்டா போதும்னு அமைச்சர் பறந்துட்டாரே... அடுத்து, அதிகாரிகளும் நடையைக் கட்டிடுவாங்க... நாம வழக்கம் போல, மழைக்காலத்துல பிெரட், பால், மெழுகுவர்த்திக்கு அலைய வேண்டியது தான்' என புலம்ப, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஆக 11, 2026 19:01

சட்டிக்குப். பயந்து நெருப்பில். குதித்த. நிலைதான் மக்களை. சந்திக்க. அஞ்சி. ஓட்டம். பிடிக்கவா. உங்களுக்கு. ஓட்டுப்போட்டோம் ?


Lakshminarasimhan
ஆக 11, 2026 07:50

2 திராவிட கட்சிகளும் வேண்டாம் என்று யார் உங்க தலையில் நீங்களே கொள்ளிக்கட்டையை வெச்சுக்க சொன்னது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை