உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / மூடினால் யார் கேட்பாங்க?

மூடினால் யார் கேட்பாங்க?

சென்னை கொளத்துாரில் தி.மு.க., சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.இதில், அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலர் திவ்யா சத்யராஜ் பேசுகையில், 'பெண்களுக்கு எதிராக நிறைய அவதுாறு நடப்பது ஏன்? வாரிசு அரசியல் மற்றும் டாஸ்மாக் என, மூன்று கேள்விகள் என், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்திற்கு வந்து கொண்டே இருக்கும்.'பெண்களுக்கு எதிராக யார் பேசினாலும் முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார். வாரிசு அரசியல் பற்றி சொல்ல வேண்டும் என்றால், ஒரு மருத்துவரோட குழந்தை மருத்துவராக இருப்பதில் தப்பு இல்லை. எங்கள் கட்சியில் அனைவரும் மக்கள் பணி செய்து தான் முன்னுக்கு வந்துள்ளனர். அடுத்து டாஸ்மாக்... இது யார் ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதை தெரிந்து கொண்டு கேளுங்கள் என, பதில் அளிப்பேன்...' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'டாஸ்மாக்கை யார் கொண்டு வந்தா என்ன... இவங்க இழுத்து மூடினா, யார் கேட்க போறாங்க...' என முணுமுணுக்க, சக நிருபர்கள் ஆமோதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 03, 2025 17:15

வாரிசு அரசியல் பற்றி நாசுக்காக பட்டுக்கொள்ளாமல் தப்பித்துக்கொண்டு விட்டார். Seasoned politician ஆக உருவெடுத்து வருகிறார்


மூர்க்கன்
ஜூலை 03, 2025 14:01

மது ஒழிப்பு இதை யார் செய்தால் என்ன?? ஏன் அதை நாடு முழுவதும் செய்ய அதிகாரம் பெற்ற பிரதமர் அவர்களிடம் கேட்டால் என்ன ?? என்றும்தான் முணுமுணுக்கிறார்கள்.


சமீபத்திய செய்தி