வாசகர்கள் கருத்துகள் ( 2 )
கேவலமான ஒப்பீடு.
அம்பேதகரை பெரியாருடன் ஒப்பிடுவதை 'அங்கிருந்து' கேட்கும் அவர் ரத்தக்கண்ணீர் நடிப்பார்
வேலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த அம்பேத்கர் பிறந்த நாள் விழாவில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார்.விழாவில் அவர் பேசுகையில், 'அம்பேத்கரை ஒரு சிலர், ஜாதிய வட்டத்துக்குள் அடைத்து விடுகின்றனர். கல்வியால் முன்னேற்றம் அடைந்த அம்பேத்கர், அனைவருக்கும் பொதுவானவர். 'தமிழகத்தில் ஈ.வெ.ரா., என்றால், வடமாநிலங்களில் மக்களுக்காக குரல் கொடுத்தவர் அம்பேத்கர். ஈ.வெ.ரா.,வை புத்த மதத்துக்கு மாறுமாறு அம்பேத்கர் வற்புறுத்தினார்; ஆனால், ஈ.வெ.ரா., மறுத்து விட்டார். புத்த மதத்துக்கு மாறினால், ஹிந்து மதத்தை பற்றி பேச முடியாது' எனக் கூறியே, ஈ.வெ.ரா., மறுத்து விட்டார்...' என்றார்.இதை கேட்ட நிருபர் ஒருவர், 'அது சரி... ஹிந்துவா இருந்துக்கிட்டே, ஹிந்து மதத்தை திட்டுனா தான் பாதுகாப்புன்னு கருதியே, மதம் மாற ஈ.வெ.ரா., மறுத்துட்டார் என்ற உண்மையை போட்டு உடைச்சுட்டாரே...' என, முணுமுணுத்தபடியே கிளம்பினார்.
கேவலமான ஒப்பீடு.
அம்பேதகரை பெரியாருடன் ஒப்பிடுவதை 'அங்கிருந்து' கேட்கும் அவர் ரத்தக்கண்ணீர் நடிப்பார்