உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பக்கவாத்தியம் / விளக்கம் தர மாட்டேங்கிறாரே!

விளக்கம் தர மாட்டேங்கிறாரே!

அறநிலையத்துறை நிதியில் கல்லுாரி கட்டுவதை விமர்சித்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை கண்டித்து, தி.மு.க., மாணவரணி சார்பில், கோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஈரோடு தி.மு.க., - எம்.பி., பிரகாஷ் பேசுகையில், 'பழனிசாமி, கடும் மன அழுத்தத்தில் இருக்கிறார். வரும், 2031ல், அ.தி.மு.க., என்ற கட்சியே இல்லாமல் போய்விடும். 'இதுவரை, 3,500 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளோம்; இன்னும், 1,000 கோவில்களுக்கு நடத்த உள்ளோம். அறநிலையத்துறையின் சொத்துக்களை மீட்டுள்ளோம். அத்துறையின் நிதியை மாணவர்கள் படிப்புக்காக செலவு செய்தால் என்ன தவறு...' என்றார். பார்வையாளர் ஒருவர், 'உயர் கல்வித் துறைக்கு தான் வருஷா வருஷம் பல ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குறாங்களே... அந்த நிதியில் கல்லுாரி துவங்காம, கோவில் பணத்தை ஏன் எடுத்தோம்னு விளக்கம் தர மாட்டேங்கிறாரே...' என, சலித்தபடியே அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூலை 27, 2025 23:21

பக்தர்கள் உண்டியலில் பணம் போடுவதையும் கோவில்களுக்கு நன்கொடை தருவதையும் தவிர்த்து, ஏழ்மையான முதியோர் இல்லத்துக்கு அன்னதானம், அனாதை ஆசிரமத்துக்கும் வேத பாடசாலைக்கும் நன்கொடைகளை தந்து புண்ணியம் தேடிக்கொள்ள வேண்டும்.


D.Ambujavalli
ஜூலை 27, 2025 16:40

உயர் கல்வித்துறை ஒதுக்கீடு மட்டும் இவர்களது பகாசுர பசிக்குப் போதுமா? பக்தர்கள் செலுத்தும் காணிக்கை இன்னும் கோயில் வருமானம் எல்லாவற்றையும் கல்லூரி பெயரால் கபளீகரம் செய்ய வேண்டாமா ?