உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

திருச்சி ம.தி.மு.க., -- எம்.பி., துரை பேட்டி: பணம் கொடுத்து ஓட்டு பெறுவதற்கு முற்றுப்புள்ளி வேண்டும்; அந்த மாற்றம்மக்களால் தான் வர வேண்டும்.நல்ல வேட்பாளருக்கு ஓட்டளிக்கும்எண்ணம் வர வேண்டும். அப்போது தான்அரசியல்வாதிகளுக்கும், அரசியல்இயக்கங்களுக்கும் பயம் வரும்.எப்படியும் நாம் மீண்டும் தேர்தல் களத்துக்கு வர அஞ்சு வருஷம் ஆகுமேனு இப்படி எல்லாம் பேசுறாரோ?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: லஞ்சம், ஊழல், நெஞ்சம் பதறும் லட்சணத்தில் உள்ளது. கனிம வளத்துறை துவங்கி, கல்வி, கலால், மின்துறை என, சேவை நோக்கம் கொண்ட துறைகள் அனைத்திலும் நிர்வாக சீர்கேடு. ஓட்டளித்தமக்கள் ஓட்டு போட்ட கைவிரலை கடித்து துப்புகிறதுக்கத்தில் உள்ளனர். ஆனாலும், கூட்டணி மிதப்பில், ஆளும் தி.மு.க., மக்களை மதிக்காமல், கார் பந்தயகளிப்புகளின் பத்தத்தில்உள்ளது. தட்டிக்கேட்க வேண்டிய எதிர்க்கட்சியோ, உருப்படாத உட்கட்சி யுத்தத்தில் மூழ்கியுள்ளது.கோடநாடு வழக்கை அடிக்கடி சுட்டிக் காட்டியும், தமிழக அரசு ஒண்ணும் செய்யலையேனு விரக்தியாகிட்டாரோ?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: போதை பொருட்களின் புகலிடமாக தமிழகம் உள்ளது. இதற்கு தி.மு.க., அரசின் நிர்வாக திறமையின்மையே காரணம்.தமிழகத்தை போதை நாடாக மாற்றியது தான், அரசின் மூன்றாண்டு சாதனை. 'தி.மு.க., ஆட்சியில் போதைப் பொருட்களின் நடமாட்டம் கொடி கட்டி பறக்கிறது' என, பலமுறை அறிக்கை வாயிலாக தெரிவித்தேன். இதை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.இவர் அறிக்கை விட்டு இந்த ஒரு விஷயத்தில் மட்டும்தான் அரசு நடவடிக்கை எடுக்கலையா?அரசு மருத்துவர்களுக்கானசட்ட போராட்டக்குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பாக, இந்திய மருத்துவ சங்கம் ஆன்லைன் வழியாக ஆய்வு நடத்தியது. இதில், நாடு முழுதும், 22 மாநிலங்களை சேர்ந்த, 3,000 மருத்துவர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வில், 63 சதவீதம் பேர் பெண்கள், 85 சதவீதம்பேர், 35 வயதுக்குட்பட்டவர்கள். அதில், 35 சதவீதம் மருத்துவர்கள்பணியிடத்தில் பாதுகாப்பின்றிஇருப்பதாகவும், அச்சத்துடன் பணிபுரிவதாகவும் கூறிஉள்ளனர். அவர்களில்பெரும்பாலானோர் பெண்கள்என்பது தான் வேதனை.பெண் மருத்துவர்கள் பாதுகாப்புக்கு, அரசே அவர்களுக்கு உரிமத்துடன் துப்பாக்கி வழங்க சொல்லலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை