மேலும் செய்திகள்
ஆர்ப்பாட்டம்
13-Aug-2024
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: மலையாள சினிமாவில் நடிக்கும்போது, கேரவனில் நடிகையர் உடை மாற்றுவதை, ரகசிய கேமரா பொருத்தி, ஆண்கள் சிலர் பார்த்து சிரித்ததை கண்டபிறகு, தான் அறைக்கு சென்று உடை மாற்றியதாக, நடிகை ராதிகா கூறியுள்ளார். பிற நடிகையருக்கும் தகவல் தெரிவித்துள்ளதாக கூறும் ராதிகா, ஏன் காவல் துறையிடம் புகார் அளிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது. குற்றத்தை தட்டி கேட்காமல் இருப்பதும் ஒரு வகை குற்றம்தான்.புகார் குடுத்துட்டு, போலீசார் விசாரணைக்கு கூப்பிட்டா, வெட்டியா அலையணுமேன்னு நழுவிட்டாங்களோ? தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி பேட்டி: உலகம் முழுதும் தலைசிறந்த டாக்டர்கள், இன்ஜினியர்கள் அனைவரும் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களாக தான் உள்ளனர். நாட்டிலேயே கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது. எங்களுக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தேசிய கல்வி கொள்கையை, தமிழக அரசு எதிர்க்கிறது. மேலும், இருமொழி கொள்கையிலும், தமிழக அரசு உறுதியாக உள்ளது.தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளில் இருமொழி கொள்கையை தான் கடைப்பிடிக்கிறாங்க என்பதைஇவங்க உறுதிப்படுத்துவாங்களா?தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: தமிழகத்தில் மதமாற்றம் அதிகம் நடப்பதாக, மூன்று நாட்களாக பாலக்காட்டில்நடந்த, அகில இந்திய சங்பரிவார் ஒருங்கிணைப்பு குழுவில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கவலை மட்டுமல்ல... அபாயத்தின் அறிகுறியும்கூட. தி.மு.க., ஆட்சியில் இருக்கும் போதெல்லாம், மதமாற்ற சக்திகளின் கை மேலோங்கி நிற்கிறது. இது ஜனநாயக நாட்டின் அஸ்திவாரத்திற்கே ஆபத்து.மதமாற்றம் விவகாரத்தில் தலையிட்டால், திராவிட மாடல் அரசின் மதச்சார்பின்மை தத்துவம் கேள்விக்குறியாகி விடுமே!தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதிஅறிக்கை: 'வரும் காலங்களில்,புதிய கல்வி கொள்கையை நாடு முழுதும் பல்வேறு மாநிலங்கள் எதிர்க்கும்' என, அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் புதிய கல்வி கொள்கை, கல்வி துறையில் நடக்கும் ஊழல்களை ஒழிக்கும். அதனால், பல அல்ல... சில மாநிலங்கள்தான் எதிர்க்கும். அதுதான் திராவிட மாடல்.'நீட்' தேர்வு வந்து தனியார்மருத்துவ கல்லுாரிகளின் கொள்ளைக்கு கடிவாளம் போட்ட மாதிரி, தனியார் பள்ளிகளுக்கும் ஆப்பு அடிச்சிடுவாங்கன்னு அஞ்சுறாங்களோ?
13-Aug-2024