உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: அன்னிய நாடுகளின் முதலீடுகளை ஈர்க்க, தமிழக முதல்வர் கடல் கடந்து அமெரிக்கா சென்றுள்ளார். இந்திய அரசுக்கு தெரியாமல், அன்னிய நாட்டில் முதலீடு செய்து மாட்டிக் கொண்டு, அபராதம் பெற்ற தி.மு.க., -- எம்.பி.,க்கு, கலைஞர் விருது. பின்றாங்கப்பா.கட்சி நிகழ்ச்சிகளுக்கும், தேர்தலுக்கும் செலவழிக்கிற பைனான்சியரை விருது வழங்கி கவுரவிக்கிறது தவறா? தமிழக பா.ஜ., பொருளாளர்எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக, ஏராளமான அகதிகள் கோவையில் பணி அமர்த்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்' என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருப்பதுஅதிர்ச்சி அளிக்கிறது. தமிழக ஆட்சியாளர்கள் கொள்கை பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பது, பிரிவினைவாதிகளை கட்சி உறுப்பினர்களாக வைத்திருப்பது என்ற வரலாறு படைத்தவர்கள். மத்திய அரசு தலையிட்டு ஊடுருவலை தடுக்க வேண்டும்.எல்லையில் கண்காணிப்பை கோட்டை விட்டுட்டு, தமிழகத்தைகுறை சொல்றது சரியா?தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டி மகிழும்முதல்வர் ஸ்டாலின், தமிழக மாநகரங்களில் அதுபோன்று நிலையை உருவாக்கினால் சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்; எரிபொருள் மிச்சப்படுத்தப்படும். லண்டன் மாநகரில், 10 சதவீதம் பேர் அலுவலகம் செல்லசைக்கிளை பயன்படுத்துகின்றனர். தமிழகத்திலும்அதுபோன்ற புதியமுயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடவேண்டும்.போன ஆட்சியில் சென்னையில், 'சைக்கிள் ஷேரிங்னு' ஒரு திட்டத்தை கொண்டு வந்தாங்க... அதுக்கு வாங்கிய சைக்கிள்களே காயலாங்கடைக்கு போயிடுச்சு!தமிழக அரசு ஊழியர்கள் சங்க பொதுச்செயலர்செல்வம் பேட்டி: சட்டசபைதேர்தலில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம்' என்றனர். ஆட்சிக்கு வந்ததும், 'ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை தீர்த்து வைப்பேன்'எனவும் ஸ்டாலின் கூறினார். இதனால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்து ஓட்டளித்தோம். முதல்வராகி, 40 மாதங்கள் கடந்த பின்பும் கொடுத்த வாக்குறுதிப்படி அரசு ஊழியர் கோரிக்கைகள் ஒன்றைக்கூட செயல்படுத்தாமல் மவுனமாக இருக்கிறார்.'அடுத்த தேர்தலில் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடமாட்டோம்'னு துணிச்சலா அறிவிச்சுடலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ