மேலும் செய்திகள்
கோவையில் 'அண்ணா', விஜய் கட்சியை 'மரண கலாய்!'
03-Dec-2024
கிராம சபை தீர்மானத்தை மதிக்காத வன அதிகாரிகள்!
17-Dec-2024
எழுத்தாளர்கள் கண்மணி, ஜோசப் கென்னடி எழுதிய, 'அங்காய வம்சம், துாக்கத்தை தின்றவர்கள்' ஆகிய நாவல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.இதில், சபாநாயகர் அப்பாவு பங்கேற்று பேசுகையில், 'நான் குடிசை வீட்டில் தான் வாழ்ந்தேன். எங்கள் வீட்டில் இருந்து, 7 கி.மீ., துாரம் நடந்து சென்று படித்தேன். சைக்கிள் வாங்க முடியாத நிலை. கிராமத்தில் ஒரு வீட்டில் தீ கங்கு வாங்கி, மற்ற வீடுகளில் சமையல் செய்யும் நிலை இருந்தது. தீப்பெட்டி வாங்கி சமையல் செய்ய முடியாத காலம் தான் அன்றைய நிலை.'இன்று முதல்வர் ஸ்டாலின் அரசால், கிராமங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன. மகளிருக்கு இலவச பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் 1,000 ரூபாய் திட்டங்களை முதல்வர் தந்துள்ளார்' என்றார்.பார்வையாளர் ஒருவர், 'நம்ம சபாநாயகர் மாதிரி, சைக்கிள் கூட வாங்க முடியாமல் இருந்த தி.மு.க.,வினர் பலர், இப்ப சொகுசு காரில் வலம் வர்றாங்களே...' என முணுமுணுக்க, மற்றொருவர், 'அவங்க வளர்ச்சிக்கும் முதல்வர் தான் காரணமா...?' என, அப்பாவியாய் கேட்டபடி நடந்தார்.
03-Dec-2024
17-Dec-2024