பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக துணை முதல்வர் உதயநிதி பேச்சு: மூன்றாண்டுகளில், 3,350 விளையாட்டு வீரர்களுக்கு, 110 கோடி ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், 3 சதவீத இடஒதுக்கீட்டில் விளையாட்டு வீரர்கள், 100 பேருக்கு விரைவில் அரசுப்பணி வழங்கப்படும். விளையாட்டு உபகரணங்களை எப்படி பயன்படுத்துகின்றனர் என, தொடர்ந்து ஆய்வு செய்து, இத்திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.விளையாட்டு துறை அமைச்சரா இருந்து துணை முதல்வராக உயர்ந்திருக்கீங்க... விளையாட்டு துறை போலவே, மற்ற துறைகளிலும் பணி நியமனங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கலாமே! தமிழக தர்காக்கள் ஜமாத் நிறுவன தலைவர் சையத் திலாவர் அலி பேட்டி: தமிழக அமைச்சரவையில் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.கருணாநிதி ஆட்சியில் இருந்தே, அமைச்சரவையில் இரண்டு முஸ்லிம் அமைச்சர்கள் இடம் பெறுவது வழக்கம். முதல்வர்,முஸ்லிம் மக்களின் முன்னேற்றத்தை கருத்தில்வைத்து, ஒரு முஸ்லிம்எம்.எல்.ஏ.,வை அமைச்சராக நியமிக்க வேண்டும். ஏற்கக்கூடிய கோரிக்கை தான்... ஆனா, டாஸ்மாக் வியாபாரிகள் தொடர்பு, சீனியர் பொன்முடியுடன் உரசல், குடும்ப உறுப்பினர்கள் அரசு நிர்வாகத்தில்ஆதிக்கம்னு அவர் மீதான குற்றச்சாட்டுகள் நீண்டால், முதல்வரும் என்ன தான் செய்வார்?அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: தீபாவளிக்குடாஸ்மாக் கடைகளில் புதுப்புது ரகங்களில் சரக்கு, இரண்டு நாட்களில் 600 கோடி ரூபாய்க்கு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்படி சாராய விற்பனையை அதிகப்படுத்தி வருமானத்தைஈட்டும் அளவுக்கு, மிகவும்மலிவான நிலைக்கு, முதல்வர் ஸ்டாலின் அரசு எதை நோக்கி பயணிக்கிறது. சட்டசபை தேர்தல் வரைக்கும்ஆவது மகளிர் உரிமைத் தொகையை சரியா தரணும்னா, இப்படி இலக்கு வச்சு சரக்கு வித்தால் தான் உண்டு!மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி:துார்தர்ஷன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது, 'திராவிட நல் திருநாடு' எனும் வாக்கியம்விடுபட்டது எதிர் பாராததுஅல்ல; திட்டமிட்ட கூட்டுசதி.தமிழக மக்களை அவமானப்படுத்தியதற்கு, கவர்னரும், துார்தர்ஷனும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.கவர்னரும், துார்தர்ஷனும் விளக்கம் கொடுத்த பிறகும் இவர் இப்படி கோரிக்கை வைப்பது வெறும் அரசியலுக்காக மட்டும்தான்!