உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

சென்னை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் சிவராஜ சேகரன் பேச்சு: கடந்த, 2015ல் பெய்த மழையின்போது நடந்த துயரச்சம்பவங்கள், மக்கள் கண்முன்ஒவ்வொரு ஆண்டும் வந்து செல்லும். இந்த ஆண்டு கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து, மக்களை அரசு எப்படி பாதுகாக்க போகிறது என்ற அச்சம் எழுந்தது. ஆனால், தமிழகத்தைகாக்கும் காவல் தெய்வமான முதல்வர்ஸ்டாலின், சென்னை மக்களை பாதுகாத்து விட்டார். முதல்வர் புகழ் பாடுவதில், இவங்க மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை மிஞ்சிடுவார் போலிருக்கே!இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் பேட்டி: கேரளா, வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசும், கம்யூனிஸ்டும் எதிர்த்து போட்டியிடுவது தவிர்க்க முடியாதது. தி.மு.க., கூட்டணியில் புகைச்சல் உள்ளதாகஎதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கவலைப்படுகிறார். முதலில், அ.தி.மு.க., பற்றி எரிவதை அவர் அணைக்க வேண்டும்.பழனிசாமி அப்படி பேசுற வரைக்கும் தான், கூட்டணியில் உங்களுக்கு தொகுதி எண்ணிக்கை கூடும்... இல்லைன்னா வழக்கம் போல ஒற்றை இலக்கம் தான்!தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா அறிக்கை: தி.மு.க., அரசு பொறுப்பேற்று,41 மாதங்கள் முடிந்தும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு கொடுத்த பணி நிரந்தர வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பணி நிரந்தரம் செய்திருந்தால், அரசு பள்ளி ஆசிரியர்கள் பெறும் சலுகைகளை, அவர்களும் பெற்றிருப்பர். தற்போது பகுதி நேர ஆசிரியர்கள், 12,500 ரூபாய் மட்டும் ஊதியம் பெறுகின்றனர். அவர்கள் தீபாவளியைகொண்டாடும் வகையில், அக்டோபர் மாத ஊதியத்தை முன்கூட்டியே வழங்க வேண்டும். தீபாவளி அன்னிக்கு தான் கூடுதல், 'சரக்கு' விற்க இலக்கு வச்சிருக்காங்க... அதுக்கு முன்னாடியே பணம் கேட்டா என்ன செய்வாங்க?தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: உள்ளாட்சி அமைப்புகளின்பிரதிநிதிகள் உட்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு முழு மரியாதை அளித்து, அவர்கள்கோரிக்கைகளை கேட்டு, அதை நிறைவேற்றி தர அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடவேண்டும். உள்ளூரில் உள்ள அலுவலகங்கள் வாயிலாகவோ, கம்ப்யூட்டர் வாயிலாகவோ அவர்கள் கோரிக்கை நிலையை அறிய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவரும் மக்கள் பிரதிநிதி தானே... எதுவும் கோரிக்கை வச்சு, அதிகாரிகள் கண்டுக்காம விட்டுட்டாங்களா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !