பேச்சு, பேட்டி, அறிக்கை
திரைப்பட நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி: அரசியலுக்கு வந்துள்ள விஜய்க்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் அரசியலில்புதிய பரிமாணம் எடுத்துள்ளார். இதில், அவர் பெரிய அளவில் வெற்றி அடைய வேண்டும். விஜய்,- உதயநிதி அரசியலில் எதிரிகள் என்பது சரிதான். ஆனால், இருவருமே எனக்கு நண்பர்கள். தமிழகம்நல்ல நிலைக்கு வர, யார் ஆட்சிக்கு வந்தாலும் நான் ஆதரிப்பேன்.விஜய் பெரிய அளவில் வெற்றி அடையணும்னா, இவங்களை மாதிரி அவரோட நடிச்சவங்க, அவரது பிரசாரப் பீரங்கியா மாற வேண்டாமா?அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் கே.பி.முனுசாமி பேச்சு:வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றுஆட்சிக்கு வர வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கட்சியினர்எடுத்து கூறுவதுடன், திண்ணை பிரசாரம் செய்து கடுமையாக உழைக்க வேண்டும். அப்போதுதான், மக்களை நேசிக்கும் அ.தி.மு.க., பக்கம் அனைவரும் வருவர். வரும் தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., இடையே மட்டுமே போட்டி.அப்ப, 'புதுசா கட்சி துவங்கிஇருக்கும் நடிகர் விஜயை கூட்டணிக்குள்ள வளைச்சு போட்டுருவோம்'னு சொல்றாரா...இல்ல, 'அவர் ஒரு பொருட்டே இல்லை'ன்னு சொல்றாரா?அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக்குழு தலைவர்டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: அரசு மருத்துவமனைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய, சுகாதாரத்துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, மருத்துவர், செவிலியர் பணியிடங்களை நிரப்பாத வரையில்,எந்த மாற்றத்தையும் உருவாக்கமுடியாது.உடைந்த டேபிள், சேரை மாற்ற சில லட்சங்கள் செலவழித்தால்போதும்... அதுல காட்டுற அக்கறையை பணி நியமனத்திலும்செயலர் காட்டணும்!அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி:அ.தி.மு.க.,வை பொறுத்தவரை, தனித்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்.தமிழகத்தில் இதுவரை எத்தனையோ கட்சிகள் உருவாகியுள்ளன. எந்த கட்சியும் அ.தி.மு.க.,விற்கு பாதிப்பாக இருந்ததில்லை; இனியும் பாதிப்பு ஏற்படுத்தப் போவது கிடையாது. விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வந்தால், அது குறித்து பழனிசாமி முடிவு செய்வார்.விஜயகாந்துடன் கூட்டணி வச்சு ஒரு முறை, திரைமறைவில்காய் நகர்த்தி, விஜயகாந்த் தலைமையில் தனி அணி அமைத்து ஓட்டுகளை பிரித்து மறுமுறை என, தொடர்ந்து அ.தி.மு.க.,வை ஆட்சியில் அமர்த்திய ஜெ.,யின் சாதுர்யம் இப்ப யாருக்கு இருக்கு?