உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: நடப்பாண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை, 485 தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அபராதத் தொகைகளை இலங்கை நீதிமன்றம் விதிப்பதும், மாதக் கணக்கில் அவர்கள் சிறையில்வாடுவதும் வாடிக்கையாகி விட்டது. மத்திய அரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை விடுதலைசெய்யவும், படகுகளை திரும்ப ஒப்படைக்கவும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.இப்படி வெத்து அறிக்கைகள் விட்டு முழங்குறதுக்குபதிலா, மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்களை முன்னெடுத்து பிரச்னைக்கு தீர்வு காணலாமே! த.மா.கா., தலைவர் வாசன்அறிக்கை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் கலந்த சாக்லேட்,மாத்திரை, மருந்துகள், கஞ்சா ஆயில் விற்பனை செய்யப்படுகின்றன. சில மாணவர்கள்,இளைஞர்கள் இவற்றை பயன்படுத்துவதும், விற்பனையில்ஈடுபடுவதும் கவலைக்குரியது.மாநிலம் முழுதும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு, போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்.போதைப்பொருள் ஒழிப்புக்குதான், முதல்வரே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்துற விளம்பரத்தைஅடிக்கடி, 'டிவி'யில் போடுறாங்களே!அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேச்சு: வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர யாரும் விரும்பவில்லை. பழனிசாமியை,நடிகர் விஜய் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.'பா.ஜ.,வுடன், அ.தி.மு.க.,கூட்டணி அமைக்க வேண்டும்' என, பழனிசாமிக்குவேலுமணியும், தங்கமணியும்நெருக்கடி கொடுக்கின்றனர்.சசிகலாவுக்கு ஜால்ரா அடித்தே காலத்தை ஓட்டியதால், இவரை கட்சியிலிருந்து வௌியேற்றினர். வெளியேற்றிய வீட்டுலஎன்ன நடந்தா இவருக்கு என்ன?அ.ம.மு.க., பொதுச்செயலர்தினகரன் அறிக்கை: தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் தேனாறும், பாலாறும் ஓடும் என்பது போன்ற வாக்குறுதிகளை அள்ளி வீசினார், முதல்வர் ஸ்டாலின். ஆனால்,அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 24 மாதகால அகவிலைப்படியில் துவங்கி,ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டியவிடுப்பு ஒப்படைப்பு, கருணைப்பணி நியமனம் வரை அனைத்தையும் தி.மு.க.,அரசு முடக்கி உள்ளது.தி.மு.க.,வின் நிரந்தர ஓட்டு வங்கியான அரசு ஊழியர்களுக்குவலை விரிக்கிறார்... ஆனா, பிரயோஜனம் இருக்குமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை