உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அறிக்கை: 'ஒன்றிய பா.ஜ., அரசு திணிக்கும் குலக்கல்வி திட்டமான விஸ்வகர்மா யோஜனாவை ஏற்க மாட்டோம். அதற்கு மாற்றாக கைவினை தொழிலை ஊக்குவிக்கும் புதிய திட்டம் உருவாக்கப்படும்' என அறிவித்துள்ள,'திராவிட மாடல்' அரசின் முதல்வர் ஸ்டாலினின்அறிவிப்பு வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

அறிவிப்பு வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

'விஸ்வகர்மா' திட்டத்தை அப்படியே ஏத்துக்கிட்டா, 'ஈகோ' பாதிக்கப்படும்னு, பெயரை மட்டும் மாத்த முடிவு பண்ணியிருக்காங்களோ? அ.தி.மு.க., மருத்துவ அணியின்மாநில இணை செயலர் டாக்டர்சரவணன் அறிக்கை: சென்னையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், '4,000 கோடி ரூபாயில் பணிகளை செய்துள்ளோம். ஒரு சொட்டு தண்ணீர் இருக்காது' என, கூறினர். ஆனால், மழைநீரால் ஆறு போல சென்னை காட்சி அளித்தது. அந்த 4,000 கோடி ரூபாய் என்ன ஆனது என, தெரியவில்லை. தற்போது கூட புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பழனிசாமி ஆய்வுசெய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி, ஆறுதல் கூறி வருகிறார். அதனால் தானே, பழனிசாமி போன ஊர்களுக்கு எல்லாம், மறுநாளே முதல்வரும் ஆய்வுக்கு போயிடுறாரு!தமிழக நகராட்சி நிர்வாகதுறை அமைச்சர் நேரு அறிக்கை: மத்திய நிதி அமைச்சர்நிர்மலா சீதாராமனை டில்லியில்சந்தித்து பேசினேன். அப்போதுமத்திய அரசு, ஜல் ஜீவன் இயக்கத்திற்கு ஒதுக்கீடு செய்தநிதியில், கடந்த ஆண்டு வரை வழங்க வேண்டிய நிலுவை தொகை, இந்த நிதி ஆண்டிற்குவழங்க வேண்டிய தொகை மற்றும் இத்திட்டத்தை, 2028-ம்ஆண்டு வரை நீட்டிப்பு செய்வது தொடர்பாக அவருடன் விவாதித்தேன்.அவங்களிடம் விவாதம் எல்லாம்நடத்த முடியுமா என்ன...? மனுவை குடுத்துட்டு, 'பார்த்து செய்யுங்க மேடம்'னு பக்குவமா சொல்லிட்டு வந்திருப்பாரு!கன்னியாகுமரி காங்., - எம்.பி., விஜய்வசந்த் பேட்டி: 'பெஞ்சல்' புயல் காரணமாக, தமிழக மக்களுக்கு கடுமையானபாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பார்லிமென்டில் விவாதம் நடத்த கோரிக்கை வைத்தேன்; ஆனால், ஏற்கப்படவில்லை. புயல், மழை விவகாரம் என்பது, பொதுமக்கள்பிரச்னைக்குரிய முக்கியத்துவம்வாய்ந்தது. முதற்கட்ட நிவாரணநிதியை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கக் கூடாது.போன வருஷம் அடித்த,'மிக்ஜாம்' புயலுக்கே இன்னும் நிவாரணம் தரலை... இதுக்கு எங்க தர போறாங்க?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ