பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி: 'வரும் 2026ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க., ஆட்சி அமையும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர்பழனிசாமி கனவு காண்கிறார். அவரை முதலில், துாக்கத்தில் இருந்து விழிக்க சொல்லுங்கள்
சொல்லுங்கள்.
இவரது தந்தை டி.ஆர்.பாலு கூட, 'இண்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை பிடிக்கும்; மத்திய அமைச்சராகலாம்'னுகனவு கண்டார்... அவரை மாதிரி ஏமாந்துட கூடாதுன்னு பழனிசாமியை விழிக்க சொல்றாரா?அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: கடலுார் அருகே வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்ட சொர்ணாவூர் தடுப்பணையை, விவசாயிகள்நலன் கருதி உடனடியாக சீரமைக்க வேண்டும். 'தடுப்பணையை பலப்படுத்த, தமிழக அரசு 32 கோடி ரூபாய்ஒதுக்கிய நிலையில், அதற்கானபணிகள் ஆமை வேகத்தில் நடப்பதே, தடுப்பணையின்நடுப்பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட காரணம்'என்று, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அணையை சீரமைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்.அந்த, '32 கோடியில் 30 கோடி ரூபாய்க்கு பணிகளை முடிச்சுட்டோம்... எல்லாம் வெள்ளத்துல போயிடுச்சு'ன்னு கணக்கு காட்டிட போறாங்க!முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: 'கட்சிக்காககடன் வாங்கி செலவு செய்யுங்கள்' என, அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் முனுசாமிபேசி உள்ளார். 'அவர் கூறியபடி கடன் வாங்கி விடலாம். ஆனால், ஜாமின் கையெழுத்து,அவர் தான் போட வேண்டும்'என, நிர்வாகிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். சட்டசபையில்பழனிசாமி ஒரு கேள்வி கேட்டதும், ஸ்டாலின் அப்படியே ஆடிட்டாராம்; ஸ்டாலின், கோடநாடு என ஒரு வார்த்தை சொன்னதும், பழனிசாமி ஓடிட்டாராம்.பழனிசாமி, அரசை எதிர்த்து கேள்வியாவது கேட்டார்... இவரது தலைவர் பன்னீர்செல்வம்எங்கே போனார்?வி.சி., கட்சி பொதுச்செயலர்சிந்தனை செல்வன் பேட்டி: 'நிலத்திற்கு மேல் வரும் நீரை கண்காணிக்க நீர்வளத்துறை உள்ளது. அதேபோல், நிலத்தடிநீர்மட்டத்தை கண்காணிக்கும்வகையில், தனி ஆணையம் அமைக்க வேண்டும்' என, சட்டசபையில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன்.தமிழக அரசு, நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க உடனடியாக தனி ஆணையம்அமைக்க வேண்டும்.ஏற்கனவே, பொதுப்பணி துறையில் இருந்து நீர்வளத்துறையை பிரித்த கடுப்பில் இருக்கும் துரைமுருகன், அதில் இருந்து புதிய ஆணையத்தை பிரிக்க சொல்லும் இவரை திட்ட போறாரு!