அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
கூட்டணிக் கட்சிகளை தம் அடிமைகள் போல் நினைப்பது ஆணவப்
போக்காகும். ஒவ்வொரு கட்சியும், மக்களுக்காக போராடுவதையும்,
மக்களுக்கு உரிமைகளையும், நீதியையும் பெற்றுத் தரவே இயங்கி
வருகின்றன. ஆனால், தி.மு.க., கூட்டணிக் கட்சியாக இருந்தால்,
'மக்களுக்கு என்ன நடந்தாலும் வாய் திறக்கக் கூடாது. மீறினால் பின்
விளைவை சந்திப்பீர்' என, மிரட்டும் விதம் தரமற்றது. 'தோழமைக்கு
பொருள் அடிமைத்தனம் அல்ல' என, கூட்டணிக் கட்சிகள் பதில் சொல்ல
வேண்டும்.
கட்சிகள் பதில் சொல்ல
வேண்டும்.
'சீட்'கள் மட்டும் வாங்கியிருந்தால் பதில்
தருவாங்க... கோடி கோடியா நோட்டும் வாங்கியவங்க எப்படி எதிர்த்துப்
பேசுவாங்க? அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: தமிழகத்தில், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்திற்கு அனுமதி மறுத்ததோடு, அதில் பங்கேற்க வந்த தலைவர்களை, காவல் துறை வழிமறித்து கைது செய்தது. ஆனால், கவர்னருக்கு எதிராக தி.மு.க., சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்யாதது ஏன்?ஆளுங்கட்சியினரை கைது பண்ற துணிச்சல், நம்ம ஊர் போலீசுக்கு இருக்குதா என்ன?ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: 'நாட்டுக்கு கவர்னர் தேவை இல்லை' என பேசும் உதயநிதி போன்றோருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க, கவர்னரிடம் செல்வது என்ன நியாயம்? கவர்னர் உரையை சபாநாயகர் வாசித்தது போல, உதயநிதிக்கும், சபாநாயகரே துணை முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கலாமே!இவர், தி.மு.க.,வினரை கண்டிக்கிறாரா அல்லது ஐடியா கொடுக்கிறாரா என்றே தெரியலையே!தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: சட்டசபையில் தேசிய கீதம் பாட சொன்ன கவர்னரின் வேண்டு கோளை ஏற்க, தி.மு.க., அரசு மறுத்துள்ளது. தமிழகம், இந்திய வரைபடத்துக்குள் தான் இருக்கிறதா? மீண்டும் ஒரு தேசப்பிரிவினை வாதத்திற்கான தொடக்கமா இது... இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தமிழகம் என்பதை, அந்நாளில் ஏற்காத தி.மு.க., தேசிய பாதுகாப்பு சட்டத்திற்கு பயந்து, இடையில் ஏற்றதே... அது பொய்யா? இப்போது ஆட்சியில் இருப்பதால் வந்த அகங்காரமா இது? முதல்வர் விளக்குவாரா?தேசிய கீதத்தை கவர்னர் உரைக்குப் பின் பாடுவதாகத் தானே சொல்லியிருக்காங்க... அதுக்கு அவ்வையார் பாணியில் இத்தனை கேள்விகள் அவசியமா?