உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி:

தமிழக முதல்வரின் முக்கியமான முத்தான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, பா.ஜ., ஆளும் மத்திய பிரதேசத்தில் செயல்படுத்தியுள்ளனர். அடுத்து, மஹாராஷ்டிராவிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய தலைநகரான டில்லியில், நல்ல தொழில் வளத்தோடு இருக்கிற பகுதியிலேயே இந்த மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை பா.ஜ., தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. எதை குறை சொல்லி பேசினரோ அதே திட்டத்தை பா.ஜ.,வினர் மற்ற மாநிலங்களில், 'காப்பி' அடிக்கின்றனர்.இதுல இருந்து, ஓட்டு வங்கி அரசியலுக்கு பா.ஜ.,வும் விதிவிலக்கல்ல என்பது நல்லாவே தெரியுது! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை: பிரதமர் மோடி மற்றும் தேசிய தலைவர் நட்டா வழிகாட்டுதலின்படி, தமிழக பா.ஜ., புதிய மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்று இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். தமிழகத்தில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, நல்லாட்சியை கொண்டு வரவும், வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, தமிழகத்தை அழைத்துச் செல்லவும், அயராது உழைக்க வேண்டும்.வாஸ்தவம் தான்... பதவி வாங்கியவங்க எல்லாம் திராவிடகட்சியினர் பாணியில், கடுமையா களப்பணிகள் செய்தால் தான், தமிழகத்தில் தாமரை மலரும்!தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் அப்துல் கரீம் பேட்டி: சட்டம் - ஒழுங்கு பிரச்னையை, தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். வட மாநிலங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கொந்தளிப்பது போல், சென்னை அண்ணா பல்கலை யில் நடந்த சம்பவத்தின் பின்புலத்தில் உள்ளவர்கள் மீதும், அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கு வங்க மருத்துவ கல்லுாரி மாணவி பாலியல் வழக்கு போல, அண்ணா பல்கலை சம்பவத்திலும் விரைந்து நீதி கிடைத்தால் நல்லது!தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு ஓட்டளிப்போம் என்பது ரகசியம். தி.மு.க.,வின் அதிகார துஷ்பிரயோகங்கள் இடைத்தேர்தலில் அரங்கேறும் என்பதால் தான், நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை.'ஆடத் தெரியாத நாட்டியக்காரி, தெரு கோணல்'னு சொல்றதா கிராமங்கள்ல ஒரு சொலவடை உண்டு... அந்த மாதிரி தான் இருக்கு இவரது சால்ஜாப்பும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி