வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஒரு நாடு ஒரே தேர்தலில் என்ன சிக்கலாம் இவரிடம் அப்படி என்ன விவாதிக்க வேண்டுமாம்? கோர்டகளில் நீதிபதிகளிடம் பல்பு வாங்கிவதை நிறுத்த ஏதாவது செய்யலாம்
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், தமிழகத்தில் புதிதாக ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளை துவங்க ஆர்வம் காட்டுவதற்கு பதில், ஏற்கனவே உள்ள 37 அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும் அனைத்து சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவத் துறைகளை துவக்கி, தரம் உயர்த்த வேண்டும்.எத்தனை மருத்துவக் கல்லுாரி துவங்கினோம் என்பதில் தான் அவங்களுக்கு பெருமை... அதுல, டாக்டர்கள், மருந்து, மாத்திரை எல்லாம் இருந்தா என்ன; இல்லைன்னா என்ன?புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை: ஆராய்ச்சி கருவி வாங்கியதில், 2.50 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக, கோவை, பாரதியார் பல்கலை சிண்டிகேட் கூட்டத்தில் குற்றச்சாட்டு எழுந்து, ஊடகங்களில் வெளிவந்துள்ளன. துணைவேந்தர் இல்லாத சூழலில், அதிகாரிகளால் அங்கு எவ்வித முறைகேடுகளும் நடக்கக்கூடாது. உயர் கல்வி அமைச்சர் கூடுதல் கவனம் செலுத்தி, துணைவேந்தர் பொறுப்புக் குழு முறைப்படி செயல்பட வழி செய்ய வேண்டும்.எங்க...? கவர்னருக்கு பதிலடி தரவே அமைச்சருக்கு நேரம் பத்தலையே!பார்லிமென்ட் கூட்டுக் குழுவிற்கு தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் கடிதம்: ஒரே நாடு; ஒரே தேர்தலால் கூட்டாட்சி கொள்கைகள் நிலை நிறுத்தப்படுவதையும், மாநிலங்கள் எதிர்கொள்ள உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது குறித்தும் மாநில கட்சிகளிடம், மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும். 'மத்திய அரசு எதை செய்தாலும் எதிர்ப்போம்' என்ற மனநிலையில் இருப்போரிடம் விவாதித்து என்ன பயன்?த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: தமிழகத்தில் பெண் ஏ.டி.ஜி.பி., ஒருவர், போலீஸ் துறையில் உதவி ஆய்வாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக அறிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அதோடு முறைகேடுகளை அம்பலப்படுத்தியதால், அவரது அலுவலகத்தில் தீ விபத்தை ஏற்படுத்தி, தன்னை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டியிருப்பது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்து கிறது. ஏ.டி.ஜி.பி.,க்கே பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவுகிறது.
இந்த விவகாரத்துல நியாயமா விசாரணை நடந்தா, இவர் இன்னும் பல அதிர்ச்சிகளை சந்திக்க வேண்டியிருக்கும்!
ஒரு நாடு ஒரே தேர்தலில் என்ன சிக்கலாம் இவரிடம் அப்படி என்ன விவாதிக்க வேண்டுமாம்? கோர்டகளில் நீதிபதிகளிடம் பல்பு வாங்கிவதை நிறுத்த ஏதாவது செய்யலாம்