பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 29
வி.சி.க., தலைவர் திருமாவளவன் எம்.பி., பேச்சு: ஆணவக் கொலைகள் தலித்துகளுக்கும், தலித் அல்லாதவர்களுக்கும் இடையிலான பிரச்னை என்பதை போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது. ஆனால், இது ஒரு சமூகப் பிரச்னை; தேசிய அளவில் கவனம் செலுத்த வேண்டிய பிரச்னை. சொல்லப் போனால், மத்திய அரசே இதை தடுக்க சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும். ‘மாநில அரசின் கட்டுப்பாட்டில் சட்டம் – ஒழுங்கு உள்ளது என்ற அடிப்படையில், மாநில அரசுகளே இந்த சட்டத்தை இயற்றலாம்’ என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில், சட்டம் இயற்ற தமிழக அரசு பெரும் முயற்சி எடுத்து வருகிறது. இதே கோரிக்கையை தி.மு.க., ஆட்சியில் நீங்க பலமுறை வச்சும், அவங்க கண்டுக்கவே இல்லையே! விளாத்திகுளம் தி.மு.க., – எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் பேட்டி: இளைஞர்களை மடைமாற்றம் செய்ய வேண்டிய இடத்தில் தி.மு.க., உள்ளது. தி.மு.க., என்ற கட்சி, ஒரு சமூக சீர்திருத்த இயக்கம்; தேர்தலில் மட்டும் நின்று மக்கள் மன்றத்தை சந்திப்பதில்லை. த.வெ.க, ஆட்சியில் அடைந்திருக்கிற மாசுகளை துடைப்பதற்கும், இளைஞர்களை நல்வழிக்கு கொண்டு வருவதற்கும், தி.மு.க., எப்போதும் துணை நிற்கும். எங்கள் கட்சி தலைவர் ஸ்டாலின் அதை தொடர்ந்து செய்வார். ‘தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதியை கட்சி தலைவராக்கிட்டு, ஸ்டாலின் சத்தம் காட்டாம ஒதுங்கிடணும்’னு சொல்லாம சொல்றீங்களோ? த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் பேட்டி: கள்ளக்குறிச்சி த.வெ.க., – எம்.எல்.ஏ., விவகாரத்தில் விசாரணை நடந்து வருகிறது. கடந்த தி.மு.க., ஆட்சியில், பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்தோடு இருந்தனர். அப்போது, பெண்கள் பாதுகாப்பு எப்படி இருந்தது என்று மக்களுக்கு தெரியும். தி.மு.க., ஆட்சியிலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது உண்மை தான்... ஆனா, கலெக்டருக்கே பாதுகாப்பு இல்லாம போனது எல்லாம் உங்க ஆட்சியில் தான்!
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை:
சட்டசபை தேர்தலில், ‘அனைத்து தொகுதிகளிலும் உங்கள் விஜய் போட்டியிடுவதாக எண்ணி மக்கள் ஓட்டளிக்க வேண்டும்’ என, விஜய் பிரசாரம் செய்தார். இன்று கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செய்த கேவலமான, இழிவான செயலை, ஆளுங்கட்சி என்று அஞ்சாமல், துணிவாக முன்வந்து கலெக்டர் புகார் அளித்துள்ளார். தற்போது கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செய்த குற்றத்தை, மக்கள் எவ்வாறு பார்க்க வேண்டும் விஜய் அவர்களே!- ‘உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருப்பேன்’னு கூடத்தான் பல தலைவர்களும் பிரசாரத்தில் பேசியிருக்காங்க... ஆனா, ஒரு தலைவராவது அப்படி இருந்திருக்காங்களா?