உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: சமீபத்தில், புதிதாக அரசு பணியில் நுழையும் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி பேசிய முதல்வர் ஸ்டாலின், 'மருத்துவர்கள் செய்யப் போவது சாதாரண பணியோ, வேலையோ அல்ல; மக்களின் உயிர் காக்கும் சேவை' என தெரிவித்துள்ளார். ஆனால், இங்கு உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு, நீதிமன்ற குமாஸ்தாவின் ஊதியத்தை விட குறைவான ஊதியம் தரப்படுவதாக நீதிமன்றமே விமர்சித்த பிறகும், கல் நெஞ்ச அரசாகவே உள்ளது தான் வருத்தமான உண்மை.'அரசு டாக்டர்களை விட அதிக சம்பளம் வாங்குறோம்'னு குமாஸ்தாக்கள் பெருமை அடிச்சுக்கட்டும்னு மாத்தி யோசிக்கிறாங்களோ. அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குழு மாநில நிர்வாகி பெங்களூரு புகழேந்தி பேட்டி: 'இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தேர்தல் கமிஷன் விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும். சட்டசபை தேர்தல் வரவுள்ளதால், நீதிமன்றம் காலவரையறை நிர்ணயித்து உத்தரவு வழங்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்றை அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தொடுத்துள்ளார். இந்த வழக்கின் நோட்டீசை எனக்கும், தேர்தல் கமிஷனுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற பயம் அவரை வாட்டி வதைக்கிறது.பா.ஜ., கூட்டணி உறுதியாகிட்டா, இரட்டை இலை சின்னம் லட்டு மாதிரி கிடைச்சிடும்!தமிழக காங்., துணை தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான டி.என்.முருகானந்தம் அறிக்கை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, சுங்கச்சாவடி கட்டணத்தை ஏற்றி மக்கள் தலையில் பெரிய கல்லை போட்டுள்ள நிலையில், தற்போது பாறாங்கல்லையும் பா.ஜ., அரசு துாக்கி போட்டுள்ளது. தமிழகத்தில் இவங்க கூட்டணி பார்ட்னரான தி.மு.க.,விடம், 'காஸ் சிலிண்டர் விலையில் 100 ரூபாய் குறைப்போம்னு கொடுத்த வாக்குறுதி என்னாச்சு'ன்னு கேட்கலாமே!இந்திய குடியரசு கட்சி தலைவர்தமிழரசன் பேட்டி: வன்கொடுமை அதிகம் நடக்கும் மாநிலங்களில், தமிழகம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தமிழக சட்டசபையில், ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அப்போது தான், ஆதிதிராவிடர்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; செலவிடப்பட்டுள்ளது என்பதை விவாதிக்க முடியும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் போட்டும், அந்த துறையில் பெருசா வளர்ச்சி இல்லன்னு சொல்றாங்க... ஆதிதிராவிடர் நலத்துறைக்கு தனி பட்ஜெட் போட்டாலும் அதே கதை தான் நடக்கும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
ஏப் 11, 2025 12:35

காங்கில் யாருமே படிப்பறிவற்றோர் என்பது இவர் உளறலில் தெரிகிறது! உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் எரி வாயு விலை நிலவரம் பற்றியெல்லாம் அறியாமல் ஏதோ அடித்துவிடுகிறார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை