உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தி.மு.க., எதை செய்தாலும், அதை நியாயப்படுத்த, பக்கவாத்தியங்கள் நிறைய இருக்கின்றன. 'டாஸ்மாக்' வழக்கில், அமலாக்கத் துறை சோதனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருக்கிறது. 'இந்த உத்தரவு, தி.மு.க., அரசுக்கு ஒரு முன்னெடுப்பாக அமைந்திருக்கிறது' என சொல்லும் அதன் கூட்டணி கட்சித் தலைவர்கள், தமிழக பல்கலை துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை, மாநில அரசுக்கு வழங்கும் சட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதை, தி.மு.க., அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக ஏற்றுக் கொள்வரா?அப்படி ஒரு சம்பவமே தமிழகத்தில் நடந்த மாதிரி, எந்த கூட்டணி கட்சித் தலைவர்களும் காட்டிக்கலையே! தமிழக கவர்னர் ரவி பேச்சு: அரசியல் தலைமையகமான சென்னை, வளமாக இருக்கிறது. ஆனால், கலாசார தலைமையகமான தஞ்சாவூர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் கூறுகிறது. ஆனால், தமிழ் கலாசாரத்தை பாதுகாக்க, அந்த அரசியல் கட்சிகள் என்ன செய்தன? கலையை புறக்கணித்தது மட்டுமல்லாமல், கலாசாரமே அரசியலாக்கப்பட்டுள்ளது. கலாசாரம் நம்மை இணைத்திருந்தாலும், அதை அரசியல் பிரிக்கிறது.வாஸ்தவம் தான்... கலையிலும், கலைஞர்களிலும் கட்சி அடையாளத்தை பதித்து, முத்திரை குத்தி தானே வச்சிருக்காங்க!தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: தமிழகத்தில் செயல்படுத்த மறுக்கும் மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ கல்வி திட்டத்திற்கு, 2,291 கோடி ரூபாய் நிதி கேட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விட்டு, 'நிதி கேட்க டில்லி செல்கிறேன்' என முதல்வர் கூறியிருப்பது, வேறு ஏதாவது தவிர்க்க முடியாத அழுத்தத்தின் காரணமாக செல்கிறாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சந்தேகத்தை, உங்க பா.ஜ., மேலிட தலைவர்களிடமே கேட்டு தெளிவுபடுத்திக்கலாமே!தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'ஜெ., குறித்து விமர்சித்த பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளது' என, காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார். தன் கட்சித் தலைவரை கொன்ற குற்றவாளிகளை ஆதரித்து பேசியவர்களோடும், அந்த குற்றவாளிகள் விடுதலையானபோது கட்டியணைத்து, ஆரத்தழுவி உச்சி முகர்ந்தவர்களோடும் கூட்டணி வைத்துக் கொண்டு, கொஞ்சம் கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லா மல், மற்றவர்கள் குறித்து விமர்சனம் செய்வது வெட்கக்கேடு.அடடா... இவ்வளவு ஆவேசமா பதிலடி வரும்னு தெரிஞ்சிருந்தா, செல்வப்பெருந்தகை வாயை திறந்திருக்கவே மாட்டாரு!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Anantharaman Srinivasan
மே 25, 2025 23:44

அரசியல் கட்சிகள் எதிரணியில் இருக்கும் போது பேசியதை நினைத்தால் எந்தகாலத்திலும் அணிதாவி கூட்டணி அமைக்க முடியாது. இந்த வகையில் அரசியல்வாதிகள் வெட்கம் மானம் சூடு சொரணையை முற்றும் துறந்த துறவிகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை