உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., சமூக ஊடக பொறுப்பாளர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை: அமெரிக்க அதிபராக டிரம்ப் முதல் முறை பதவி வகித்த காலத்தில், 2019ல் பிரதமர் மோடி, அமெரிக்கா சென்றபோது, டெக்சாஸ் மாகாணம், ஹூஸ்டன் நகரில், 'ஹவுடி மோடி' என்ற பெயரில் நடந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் பங்கேற்றனர். 2020ல் டிரம்ப் , இந்தியா வந்த போது, குஜராத்தின் ஆமதாபாதில் நடந்த, 'நமஸ்தே டிரம்ப்' என்ற பிரமாண்டமான நிகழ்ச்சியில் டிரம்ப் பேசுகையில், 'இந்தியாவின் ஒற்றுமையில் பன்முகத்தன்மை என்ற கோட்பாடு உலகுக்கு ஊக்கமளிக்கும்' என்றார். ஆனா, யார் கண் பட்டுச்சுன்னு தெரியலையே... அப்ப நமக்கு ஹீரோவா இருந்த டிரம்ப், இப்ப வில்லனா மாறிட்டாரே! தமிழருவி மணியன் தலைமை யிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச்செயலர் பா.குமரய்யா பேட்டி: டி.ஜி.பி., பதவிக்கு வெங்கட்ராமன் என்ற ஐ.பி.எஸ்., அதிகாரியை பொறுப்பாளராக நியமித்துள்ளனர். போலீஸ் துறையின் தலைமை பொறுப்பிற்கு, அதிகாரி நியமிக்கப்படுவதிலேயே இத்தனை ஊசலாட்டம் ஏன்? டி.ஜி.பி., நியமன விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு, முதல்வர் என்ன பதில் சொல்ல போகிறார்? அதெல்லாம் வெளிநாட்டு பயணத்தை முடிச்சுட்டு வந்து சாவகாசமா பதில் தருவார்! ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப் பட்டுள்ள மல்லை சத்யா அறிக்கை: தொண்டன், தலைவன் மீது நம்பிக்கை வைத்திருப்பான். ஆனால் தலைவன், தொண் டன் மீது நம்பிக்கை வைக்காமல் போனதன் விளைவே ம.தி.மு.க.,வின் இன்றைய நிலைக்கு காரணம். 32 ஆண்டு களாக எங்கள் உழைப்பை உறிஞ்சி, சக்கையாக துாக்கி எறிந்த உங்கள் அரசியலை நாடு பார்க்கிறது. அதற்கான விளைவை நிச்சயம் நாட்டு மக்கள் உங்களுக்கு வழங்கியே தீருவர். இது, சத்யாவின் வாக்கு அல்ல... சத்தியத்தின் வாக்கு! அடடா... அங்க இருந்து வெளியே அனுப்பியதற்கு பெரிய கும்பிடா போட்டுட்டு, அடுத்த வேலையை பார்க்காம ஏன் இப்படி புலம்புறாரு? தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு: தேசிய கல்விக் கொள்கையின் பலன்களையும், நன்மைகளையும் உணர்ந்து, மதுரை காமராஜர், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன் மற்றும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் போன்ற பல்கலைக் கழகங்கள், தங்கள் மனிதவள மேம்பாட்டு மையங்களுக்கு, 'மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மையம்' என மறுபெயரிட்டு உள்ளன. தி.மு.க., அரசை நம் பியிருக்காமல், தேசிய கல்விக் கொள்கையை ஏற்று, அதன் பயன்களை மாணவர்களுக்கு அளித்து வருவது வரவேற்கத்தக்கது. தேசிய கல்விக் கொள்கையை ஏத்துக்காம இருந்தால், பல்கலை மானியக் குழுவின் நிதியை, 'கட்' பண்ணிடுவாங்களே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை