உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி., வில்சன் அறிக்கை: பேச்சு, எழுத்து சுதந்திரம் பற்றி பேசுவதற்கு பா.ஜ.,வுக்கு தகுதியில்லை. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலையை கொண்டாடியவர்கள் இவர்கள் தானே. விவசாயிகள் போராடிய போது, அவர்களுக்கு எதிரான வன்முறையை உற்சாகமாக கொண்டாடியவர்கள் இவர்கள் தானே. 2014 முதல் 2025ம் ஆண்டு வரை, தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக, ஆளும் மத்திய அரசாலும், மாநிலங்களில் ஆட்சியில் உள்ள பா.ஜ., அரசுகளாலும், 10க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். * தமிழக அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த, 'யு - டியூபர்' சவுக்கு சங்கரை கைது பண்ணிய கதையை இவர் மறந்துட்டாரோ? *** தமிழக பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன் பேட்டி: கரூர் சம்பவம் குறித்து அரசு பக்கமும், த.வெ.க., பக்கமும் தவறு இருப்பதாக, முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கருத்து கூறியுள்ளார். தன் கருத்தை தலைமை செயலரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலினிடம் எந்த நேரமும் தொலைபேசியிலும், நேரிலும் சந்தித்து பேசக்கூடிய தகுதி பெற்றவர் சிதம்பரம். பின் எதற்காக, முதல்வரிடம் கருத்து தெரிவிக்காமல், தலைமை செயலரிடம் தெரிவித்துள்ளார் என்பது தான் வினோதமாக இருக்கிறது. * 'உங்க அரசு மீது தான் தப்பு' என்று முதல்வரிடம் நேரடியாக குற்றம்சாட்ட முடியுமா? தமிழக காங்., முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து, காசாவை எப்படி கபளீகரம் செய்வது என்பதற்காக ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளனர். அதற்கு பெயர் சமாதானம், போர் நிறுத்த ஒப்பந்தம் என சொல்கின்றனர். புலி, மானை வேட்டையாடுவதற்கு சொல்லும் நீதியை போல் இந்த நீதி இருக்கிறது. * இந்த மாதிரி சர்வதேச விவகாரங்களில் கருத்து தெரிவிக்க தான் ராகுல் இருக்காரே... இவர், தமிழக பிரச்னைகளுடன் முடிச்சுக்கிட்டா போதாதா? இந்திய கம்யூ., கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன் அறிக்கை: தமிழகத்தின் மைய பிரச்னையாக மதுவும், போதையும் தான் இருக்கின்றன. இது, சமுதாயத்தை சீரழித்ததை போல வேறு எதையும் சீரழிக்கவில்லை. நாள்தோறும் இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் சமூகமாக நின்று, ஒரு பாதுகாப்பு கவசமாக வாழ்க்கை முறையை அமைத்தால் மட்டுமே, இந்த தீமையில் இருந்து அடுத்த தலைமுறையை பாதுகாக்க முடியும்.* 'தி.மு.க., அரசு போதையை ஒழிக்க எதுவும் செய்யாது' என்பதை சுத்திவளைச்சு சொல்றாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை