வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தி எதிர்ப்பு திணிப்பு, இந்தி தெரியாது போடா என்று தமிழ்நாட்டில் கூப்பாடு போட்டுவிட்டு, டெல்லி தலைவர்களுடன் சரளமாக இந்தியில் பேசி ஊரை ஏமாற்றுவது யார்..?
தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி: தேர்தலுக்காக மட்டும் பொங்கல் கொண்டாடுபவர் களை பற்றி, நாம் பேசி பயனில்லை. தேர்தலுக்கு தேர்தல் தமிழர்களை பற்றி, தமிழகத்தை பற்றி, தமிழ் மொழி பற்றி அக்கறைப்படக் கூடியவர்கள், அவர்கள். ஹிந்தியை திணிக்க நினைப்பவர்கள், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை மறுப்பவர்கள், தேர்தல் வரும் போது மட்டும் நம்மை ஏமாற்ற முயற்சிப்பர். அவர்கள் யார் என்று மக்களுக்கு அடையாளம் தெரியும். ஏன் இவ்வளவு கோபம்?டில்லியில் மத்திய இணை அமைச்சர் முருகன் வீட்டில் நடந்த விழாவுக்கு, எம்.பி., யான கனிமொழிக்கு அழைப்பு விடுக்கலியோ?மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செல்லுார் ராஜு பேட்டி: மீண்டும், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தலைமையில், தமிழகத்தில் ஆட்சி அமைய வேண்டும் என, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் வழிபாடு செய்தேன். 'உங்கள் கனவு என்ன?' என, முதல்வர் ஸ்டாலின் கேட்கிறார். தி.மு.க., ஆட்சி ஒழிய வேண்டும் என்பதே, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கனவு! 'மதுரை மேற்கு சட்டசபை தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும்' என, ஆண்டாளிடம் கேட்கவில்லையா... ஆச்சர்யமாக இருக்கிறதே! பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை: மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்பு களையும், சிந்தனைகளையும் வழங்கிய, பன்முக ஆளுமை கொண்ட திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன். தமிழ் கலாசாரத்தின் சிறந்த அம்சங்களுக்கு, அவர் எடுத்துக்காட்டாக திகழ்கிறார். திருக்குறளை மக்கள் அனைவரும் படிக்க வேண்டும். செல்லும் இடமெல்லாம் தமிழின் பெருமை பேசும் பிரதமர் மோடி போல, யாருமே வெளிநாடுகளிலும் தமிழ் பெருமை பேசாதது, நம் துரதிர்ஷ்டம்! அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிக்கை: கறிக்கோழி விவசாயிகளையும், விவசாயிகள் சங்கத்தினரையும் தமிழக அரசு கைது செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது. நியாயமான கோரிக்கைகளுக்காக போராடியதற்காக கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பேச்சு மூலம், இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். போராட்டம் நடத்துவோரை துாண்டி விடுவது யார் என உளவுத்துறை தமிழக அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் இருக்குதோ என்ற சந்தேகம் வருது! தமிழக, பா.ஜ., அறிக்கை: மத்தியில் ஆண்ட காங்கிரஸ் - தி.மு.க., கூட்டணி அரசில், காட்டு விலங்குகள் பட்டியலில் காளையையும் சேர்த்து, அறிவிப்பாணை வெளியிட்டது. ஆனால், ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்ற நோக்கில், விலங்குகள் பட்டியலில் இருந்த காளையை நீக்கி, மத்திய பா.ஜ., அரசு அறிவிப் பாணை வெளியிட்டது. ஜல்லிக் கட்டை தடை செய்த, தமிழர் விரோத, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை, தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் காலம் என்பதால், பழைய விஷயத்தைக் கிளறி குளிர் காய்றாங்க. இது, ஓட்டு அறுவடை பலனைத் தந்தால் ஆச்சரியம் தான்!
இந்தி எதிர்ப்பு திணிப்பு, இந்தி தெரியாது போடா என்று தமிழ்நாட்டில் கூப்பாடு போட்டுவிட்டு, டெல்லி தலைவர்களுடன் சரளமாக இந்தியில் பேசி ஊரை ஏமாற்றுவது யார்..?