உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி பேட்டி:அரசியலுக்கு வர இருந்த நடிகர் ரஜினியை, தி.மு.க., மிரட்டியதாக, த.வெ.க., தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்பதை, தி.மு.க.,வில் மட்டுமே பார்க்க முடியும். யாரையும் மிரட்டும் வகையில் நாங்கள் அரசியல் செய்ததே இல்லை. மக்களை அன்பால் வளைத்து, அரசியல் செய்கிறோம்.'தி.மு.க.,வில் ஜனநாயகம் இருக்கு' என்கிறாரே... அந்த கட்சியின் தலைமை பதவிக்கு இவரால் போட்டியிட முடியுமா?தி.மு.க.,வில் சமீபத்தில் இணைந்துள்ள, நடிகர் விஜயின் முன்னாள் மேலாளர் செல்வகுமார் பேட்டி: விஜய், அரசியலுக்கு முற்றிலும் தகுதியற்றவர். நிஜ வாழ்க்கையிலும் அவர் நடித்து கொண்டிருக்கிறார். விஜய்க்காக, 27 ஆண்டுகள் உழைத்த என்னை போன்ற நெருக்கமானவர்களையும், படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு அளித்தவர்களையும் மறந்து விட்டார். எனவே, வரும் தேர்தலில், விஜய் தலைமையிலான, த.வெ.க., 234 தொகுதிகளிலும், 'டிபாசிட்' இழக்கும். அரசியல்வாதிகள் எல்லாருமே, மக்கள் முன்னாடி நடிச்சிட்டு தான் இருக்காங்க! அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள, 1,100 டாக்டர்கள் பணியிடங்களுக்கு கலந்தாய்வு துவங்கியுள்ளது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல், முதல் கட்ட கலந்தாய்வுக்கு பொதுப்பிரிவினர், 100 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளி டாக்டர்களால் நீண்ட தொலைவுக்கு பயணிக்க முடியாது என்பதால், அவர்களின் சொந்த ஊர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் பணியாற்ற, வழக்கமாக வாய்ப்பளிக்கப்படும். அதற்கு வசதியாக, கலந்தாய்வில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆனால், இம்முறை அவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது, அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம்; சமூக அநீதி. மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு என, தனி துறை இருந்தா மட்டும் போதுமா... அவங்க நலனில் நிஜமான அக்கறை வேண்டாமா? சென்னை, மயிலாப்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.,வும், நடிகருமான எஸ்.வி.சேகர் பேச்சு: சட்டம் - ஒழுங்கு கெட்டு விட்டதாக, த.வெ.க.,வினர் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் நடந்த கூட்டத்தில், அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 'முட்டாள் முதல்வர்' என, குறிப்பிட்டது அநாகரிகமானது; கண்டிக்கத்தக்கது. பொதுவெளியில் எப்படி பேச வேண்டும் என தெரியாத தற்குறியாக, ஆதவ் அர்ஜுனா உள்ளார். அயோக்கியர்களின் புகலிடம் அரசியல் என்பது பொதுவான வார்த்தை. அது, ஆதவ் அர்ஜுனாவுக்கு தான் பொருந்தும். தி.மு.க.,வினருக்கே வராத கோபம் இவருக்கு வருதே... மயிலாப்பூர் சட்டசபை தொகுதிக்கு, 'துண்டு' போடுறாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை