சுகாதார சீர்கேடு
பங்கூர் கெங்கையம்மன் கோவில் வீதியில் சாக்கடை அடைத்து கொண்டு கழிவுநீர் தேங்கி நிற்பதால், கடும் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.ஸ்டாலின், பங்கூர். மின் விளக்கு எரியுமா?
விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில், எம்.என்.குப்பம் முதல் வில்லியனுார் பைபாஸ் வரை சாலையோர மின் விளக்குகள் எரியவில்லை. முத்துக்குமரன், ஆரியப்பாளையம். வாய்க்காலில் குப்பை குவியல்
வெங்கட்டா நகர், 45 அடி சாலையோரம் உள்ள ப வடிவ வாய்க்காலில் குப்பைகள் குவிந்து கிடப்பதால், தண்ணீர் தேங்கி நிற்கிறது.பச்சையப்பன், ரெயின்போ நகர். பாதியில் நிற்கும் பஸ்கள்
புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு செல்லும் பஸ்கள் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்பதால் பல பஸ்கள் கண்டமங்கலத்துடன் நிறுத்தப்படுகிறது.பாலச்சந்தர், மதகடிப்பட்டு. குண்டும் குழியுமான சாலை
புதுச்சேரி, உப்பளம் அம்பேத்கர் சாலையில் இருந்து தேங்காய்த்திட்டு துறைமுகம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக கிடக்கிறது.ஜெயபால்,தேங்காய்த்திட்டு.மரப்பாலத்தில் இருந்து வேல்ராம்பட்டு செல்லும் மெயின்ரோடு மற்றும் ஏரிக்கரை சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று கிடக்கிறது.செல்வம், வேல்ராம்பட்டு. டிராபிக் ஜாம்
முருங்கப்பாக்கம் முதல் மரப்பாலம் சந்திப்பு வரை தினசரி காலை 7:00 மணி முதல் 10:00 மணி வரை கடுமையான டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.சிவா, நோணாங்குப்பம்.