புகார் பெட்டி
வாய்க்காலில் இரும்பு தடுப்பு சேதம் குருசுக்குப்பம், தில்லை நாட்டார் வீதி - பிரான்சுவா வீதி சந்திப்பில், வாய்க்காலின் மேல் உள்ள இரும்பு தடுப்பு சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மனோகர், குருசுக்குப்பம். நாய்கள் தொல்லை ரெட்டியார்பாளையம் கம்பன் நகரில், நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். ஜெயராமன், ரெட்டியார்பாளையம். சாலை மோசம் காமராஜர் நகர் தொகுதி ஆரோக்கிய மாதா கார்டன் சாலை மிகவும் மேசமான நிலையில் உள்ளது. வெண்ணிலா, புதுச்சேரி. ஜிப்மருக்கு டவுன் பஸ் தேவை புதிய பஸ் ஸ்டேண்டில் இருந்து ஜிப்மருக்கு இரவில், டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். செல்வி, கோரிமேடு.