மேலும் செய்திகள்
புகார் பெட்டி
19-Jan-2026
சுகாதாரசீர்கேடு தவளக்குப்பம் ஒத்தவாடை வீதியில், மின் அலுவலகம் எதிரே குப்பைகள் சாலையில் சிதறி கிடப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மணிவண்ணன், தவளக்குப்பம். சாலையில் மீன் கடை உப்பளம் சாலையில், மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்வதால், பள்ளி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ராணி, உப்பளம். டவுன் பஸ் தேவை தேங்காய்திட்டு பகுதிக்கு டவுன் பஸ் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அருளப்பன், தேங்காய்திட்டு. ஆக்கிரமிப்புகளால் நெரிசல் காமராஜர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ராமன், காமராஜ் சாலை. நாய்கள் தொல்லை முதலியார்பேட்டையில் நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால், மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். கண்ணன், முதலியார்பேட்டை.
19-Jan-2026