வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கிரேட் . வாழ்க வளமுடன்
சென்னை, தரமணியைச் சேர்ந்த காதல் தம்பதி மகிழன் - ஸ்ருதி:ஸ்ருதி: என் பூர்வீகம் தஞ்சாவூர். ஆனால், சென்னையில் பிறந்து வளர்ந்தேன். கல்லுாரியில் படிக்கும்போது சமூகம் சார்ந்த, 'ஈவென்ட்'களில் பங்கேற்பேன். 'தாகம்' என்ற அமைப்பு, 2018ல் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் தான், மகிழனை சந்தித்தேன். 'கொரோனா' தொற்று பரவலில் நாங்கள் இணைந்து பலருக்கு உதவிகள் செய்தோம். ஒரே மாதிரி எண்ணங்களால் எங்களின் நட்பு பலமாக ஆரம்பித்தது.நாங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, 'வீட்டில் பெண் பார்க்கிறாங்க'ன்னு சொல்லிட்டே இருப்பார். ஒரு நாள், 'ஏன் அந்தப் பொண்ணு நானா இருக்கக்கூடாது' என்று, 'மெசேஜ்' செய்தேன்.திடீரென ஒரு நாள் என் கழுத்தில் கட்டி வளர ஆரம்பித்தது. பரிசோதித்து பார்த்ததில், 'லிம்போமா' என்ற ரத்த புற்றுநோய் என்று மருத்துவர்கள் கூறியதும், இடிந்து போய் விட்டேன்.அதனால், மகிழனிடம் இருந்து விலக ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் அவர் வற்புறுத்தி கேட்ட பின் தான், விஷயத்தை கூறினேன்.'என்னை கேவலமானவன்னு நினைச்சியா... இப்பவே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்...' என்று கூறினார். ஆனால், நான், 'உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்காதீங்க. நாம் பிரிந்து விடுவது தான் நல்லது' என்று கூறினேன்.ஆனால், மகிழன் என்னை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தார்.சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நேரங்களில், மகிழனை பல நாட்கள் பார்க்க முடியாத சூழல். நானே பார்க்க வேண்டாம் என்று தவிர்த்தாலும், அவர் வீட்டுக்கு வந்து பார்த்து விட்டு தான் செல்வார். அவருடைய காதல் தான் என்னை மீட்டுக் கொண்டு வந்தது.கேன்சர் நமக்கு இருக்கு என்று தெரிந்தால், நம்மை தனிமைப்படுத்திக் கொள்ள கூடாது. கடைசி நிமிடம் வரை நம்பிக்கையுடன் போராட வேண்டும்.மகிழன்: ஸ்ருதியிடம் எனக்கு பிடித்ததே தைரியம் தான். 'கீமோ' சிகிச்சைக்கு செல்வதற்கு முன்னாடியே மொட்டை அடித்துக் கொண்டார். சிசிச்சைக்கும் பயப்படவில்லை. தைரியமாக வந்து நின்றார். இன்று அவரை உயிருடன் வைத்துள்ளதே அவரது தைரியம் தான். கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டோம்.டாக்டர்கள் பலரும், 'உங்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் இருக்கும்; செயற்கை கருத்தரிப்பு செய்து கொள்ளுங்கள்' என்றனர். ஆனால், அந்த சிகிச்சை செய்து கொள்ளாமலே கரு உண்டானது. அப்போது, நாங்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. கீமோ சிகிச்சையால், குழந்தைக்கு ஏதும் சிக்கல் இருக்குமோ என்று பயந்தோம். ஆனால், அப்படி எதுவும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தை பிறந்தது!
கிரேட் . வாழ்க வளமுடன்