உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / பழைய துணிகளை வீணாக்குவதில்லை!

பழைய துணிகளை வீணாக்குவதில்லை!

பழைய புடவைகளை நாகரிக காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி, அவற்றுக்கு மறுவாழ்வு அளித்து, 'தான்யாஸ்ரீ பொட்டிக்' என்ற பெயரில் கடை நடத்தி வரும், கோவையைச் சேர்ந்த கிருத்திகா சந்திரன்: நெசவு தொழில் என்பது, தமிழரின் ஆயிரக்கணக்கான ஆண்டு பாரம்பரிய அடையாளம். ஆனால், துணிகள் வீணாக்கப்படுவதும், பழைய ஆடைகள் குப்பையில் சேர்வதும் இன்று அதிகரித்து வருகிறது. என் கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா என பலரும் பாரம்பரிய நெசவாளர்கள். என் பூர்வீகம் மதுரை. சின்ன வயதிலிருந்தே துணிகள் சூழ வளர்ந்ததால், அப்பாவுக்கு நான், ' பேஷன் டெக்னாலஜி' படிக்க ஆசை. அதனால் , கோவையில் , பேஷன் டெக்னாலஜி படித்தேன். ஆடை வடிவமைப் பில் நவீன தொழில்நுட்பத்தை எப்படி புகுத்துவது என, தேடி தேடி தெரிந்து கொண்டேன். நெசவாளர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள், தொழில்நுணுக்கங்கள் என, பல விஷயங்களை குறிப்புகளாக அப்பா பதிவு செய்து வைத்திருந்தார். பிற்காலத்தில் நான் ஆடை வடிவமைப்பாளராக ஆன பின், எக்காரணம் கொண்டு துணிகளை வீணாக்கக் கூடாது என முடிவெடுத்தேன். 'பொட்டிக்' ஆரம்பிப்பது என் கனவு. திருமணத்திற்கு பின் அந்த கனவு நன வானது. பாட்டி, அம்மா புடவைகளை , இப்போது பிரபலமாக இருக்கும் முறையில் மாற்றம் செய்வதில் அதிக கவனம் செலுத்தினேன். அதை பார்த்த பலரும், தங்கள் பாட்டி, அம்மாவின் புடவைகளை எடுத்து வந்து, மாற்றி தைத்து தரச்சொல்லி கேட்டனர். சின்னதாக துவங்கிய இந்த முயற்சி, தேசிய விருது வரை என்னை அழைத்து சென்றது. கடந்த, 2024ல் கோவா மாநிலத்தில் நடைபெற்ற, 'தேசிய வடிவமைப்பாளர்' விருது வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த ஆடை வடிவமைப் பாளர் விருதை பெற்றேன். இந்த போட்டிக்கு, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஆடை வடிவமைப்பாளர்கள் வந்தனர். தமிழகத்தின் பாரம்பரியத்தை அடிப்படையாக வைத்து, கைத்தறியில் ஒரு ஆடையும், 'காதி காட்டன்' துணியில் ஒரு ஆடையும் வடிவமைத்தேன். இந்த இரண்டிற்கும் தான், எனக்கு தேசிய விருது கிடைத்தது. மாற்றத்திற்கான ஒரு விஷயத்தை கையில் எடுத்த போது, துவக்கத்தில் இதற்கு வரவேற்பு இருக்குமா என்ற தயக்கம் இருந்தது. ஆனால், வாடிக்கை யாளர்களிடம் இருந்து வரும் கருத்துகள் எனக்கு நம்பிக்கை அளித்தன. துணி வீணாகும் என்பது குறித்து பேசுவோர் மிகவும் குறைவு. துணி வீணாவதை குறைப்பது தான் என் இலக்கு! தொடர்புக்கு 93604 66588


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ