மேலும் செய்திகள்
இருக்கை வசதி அவசியம்
18-Sep-2025
சித்தாமூர் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், அரசு பள்ளிகள், வேளாண் அலுவலகம், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில், 30க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன. தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சூணாம்பேடு மார்க்கமாக செல்லும் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தில், இருக்கை வசதி இல்லாததால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் சிரமப்படுகின்றனர். துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சித்தாமூர் பேருந்து நிறுத்தத்தில் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும். - கு.மூர்த்தி. சித்தாமூர்.
18-Sep-2025