/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / செங்கல்பட்டு : புகார் பெட்டி; காத்திருப்போர் இருக்கைகள் சீரமைக்க வேண்டுகோள்
செங்கல்பட்டு : புகார் பெட்டி; காத்திருப்போர் இருக்கைகள் சீரமைக்க வேண்டுகோள்
காத்திருப்போர் இருக்கைகள் சீரமைக்க வேண்டுகோள்
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி அலுவலகத்தில் செயல்படும் இ - சேவை மையத்திற்கு, தினமும் 100க்கு மேற்பட்ட நபர்கள் வருகின்றனர். இவர்கள் வரிசைப்படி காத்திருக்க, இருக்கைகள் உள்ளன.இதில், மூவர் அமரும் வகையிலான இருக்கைகளின் ஒரு பக்க ஊன்றுப் பகுதி உடைந்துள்ளதால், அந்த இருக்கைகளை காத்திருப்போர் பயன்படுத்த முடியவில்லை. இதனால், காத்திருப்போரில் சிலர், கால் வலிக்க நிற்கும் சூழல் உள்ளது.எனவே, சேதமாகி உள்ள இருக்கைகளை சரி செய்வதற்கு, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- லோ.செல்வலட்சுமி,நந்திவரம்.