/   புகார் பெட்டி    /  செங்கல்பட்டு  /   செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை விரிவாக்க பணி குறித்து  தகவல் பலகை அமைக்கப்படுமா?                      
செங்கல்பட்டு: புகார் பெட்டி; சாலை விரிவாக்க பணி குறித்து தகவல் பலகை அமைக்கப்படுமா?
சாலை விரிவாக்க பணி குறித்து தகவல் பலகை அமைக்கப்படுமா?
சித்தாமூர் அடுத்த தொன்னாடு கிராமத்தில், செய்யூர் - போளூர் மாநில நெடுஞ்சாலையில் இருந்து தொன்னாடு, ஒரங்காவலி, நீர்பெயர் போன்ற கிராமங்களுக்குச் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.சாலையில் கடந்த மூன்று மாதங்களாக, விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆனால், விரிவாக்கப் பணி குறித்து எந்த இடத்திலும் தகவல் பலகை அமைக்கப்படாமல், பணிகள் நடைபெறுகின்றன.எந்த திட்டத்தில் பணி நடைபெறுகிறது, மதிப்பீடு, நீளம், அகலம் மற்றும் மேற்பார்வை அதிகாரிகளின் விபரங்கள் இல்லாமல் உள்ளதால், சாலை விரிவாக்கப் பணியில் உள்ள குறைகளை தெரிவிக்க, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலைப் பணி நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் தகவல் பலகை அமைக்க வேண்டும்.- ரா.சதீஷ்குமார்,தொன்னாடு.