உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு / புகார் பெட்டி. சேதமான மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

புகார் பெட்டி. சேதமான மின்கம்பம் சீரமைக்க கோரிக்கை

கூவத்துார் பஜார் பகுதியில் இருந்து நெடுமரம் கிராமத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் உள்ளன.சாலை ஓரத்தில் சர்ச் அருகே உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதியில் சிமென்ட் கான்கிரீட் உதிர்ந்து சேதமடைந்து உள்ளது.பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாலையில் சாய்ந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும்.- இ.ஆறுமுகம், கூவத்துார்.சேதமான கழிப்பறைசீரமைக்க கோரிக்கைதிருப்போரூர் பேரூராட்சியில், திருவஞ்சாவடி தெரு, மீன் மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் பொது கழிப்பறைகளை பேரூராட்சி நிர்வாகம் கட்டியுள்ளது.அவை முறையான பராமரிப்பு இல்லாததால் பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. இவற்றின் கதவுகள் உடைக்கப்பட்டு உள்ளே இருக்கும் குழாய்கள், கழிப்பறை உபகரணங்கள் உடைந்துள்ளது. பேரூராட்சி நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.கிருஷ்ணமூர்த்தி, திருப்போரூர்.மேம்பாலத்தில் மணல் குவியல்விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்தாம்பரம் அடுத்த வண்டலுார் ஜி.எஸ்.டி., சாலையிலிருந்து, வாலாஜாபாத் செல்லும் மேம்பாலத்தை, தமிழக நெடுஞ்சாலை துறை முறையாக பராமரிப்பது இல்லை.இதனால், மேம்பாலத்தின் ஓரம் மணல் திட்டுகள் நிறைந்துள்ளது. இந்த மணல் திட்டுகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி விழுந்து காயமடைவது அடிக்கடி நிகழ்கிறது. நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரா. ஜானகி, மண்ணிவாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !