உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / செங்கல்பட்டு /  சாலை ஓர கடைகளால் இடையூறு

 சாலை ஓர கடைகளால் இடையூறு

திருப்போரூர் சமுதாய கூடம் அருகே ஓ.எம்.ஆர்., சாலையொட்டி உள்ள காலியிடத்தில் 10க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் மாலை நேரத்தில் அமைக்கப்படுகிறது. இக்கடைகளுக்கு பைக், கார் போன்ற வாகனங்களில் வருவோரால், அந்த வழியாக செல்லும் மற்ற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. அதேபோல், காய்கறிகளை சாப்பிட வரும் கால்நடைகளை வியாபாரிகள் துரத்தும்போது, அந்த கால்நடைகள் சாலை குறுக்கே ஓடுகின்றன. எனவே, மாற்று இடம் ஒதுக்கி கடையை மாற்ற, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.குமரேசன், திருப்போரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை