புகார் பெட்டி கான்கிரீட் பெயர்ந்த மின்கம்பம் மாற்றப்படுமா?
செய்யூர் -எல்லையம்மன் கோவில் செல்லும் சாலையோர குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு வழங்கும் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மின்கம்பங்களின் கான்கிரீட் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது.மேலும் பலத்த காற்று வீசினால், மின்கம்பம் சாய்ந்து விபத்து ஏற்படும் அபாயநிலை உள்ளது.ஆகையால் துறை சார்ந்த அதிகாரிகள் பழுதடைந்துள்ள மின்கம்பங்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி.மோகன்.செய்யூர்.