உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி :சாய்ந்துள்ள இரும்பு கம்பி சாலையில் விபத்து அபாயம்

புகார் பெட்டி :சாய்ந்துள்ள இரும்பு கம்பி சாலையில் விபத்து அபாயம்

சாய்ந்துள்ள இரும்பு கம்பி சாலையில் விபத்து அபாயம்

ஆவடி மாநகராட்சி அலுவலகம் ஒட்டி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு 60 அடி சாலை உள்ளது. சாலையோர ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள இந்த சாலையில், இரவு 10:30 மணி வரை கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படும்.சாலை மற்றும் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு குறித்து நம் நாளிதழில், கடந்த ஏப்., 5ம் தேதி படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக கண்துடைப்புக்காக, மாநகராட்சி அதிகாரிகள் சில ஆக்கிரமிப்புகளை அகற்றினர். தற்போது இந்த சாலையில், தொலைத்தொடர்புவடத்திற்காக அமைக்கப்பட்ட இரும்பு கம்பி ஒன்று, பல மாதமாக ஆபத்தான வகையில் சாய்ந்தபடி காட்சி அளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், ஒவ்வொரு நாளும் விபத்து ஏற்படும் அச்சத்தில் பயணிக்கின்றனர். சம்பந்தப்பட்ட ஆவடி மாநகராட்சி அதிகாரிகள், அசம்பாவிதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மா.எழிலரசன், ஆவடி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி