புகார் பெட்டி / மத்திய சென்னை
கழிவுநீர் ஓடுவதால்பாதசாரிகள் அவதிராயபுரம் மண்டலம், சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள லபான் தெருவில் காவலர் குடியிருப்பு அருகே மழைநீர் வடிகால் உள்ளது.இதில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், கழிவுநீர் செல்ல வழியின்றி, மூன்று நாட்களாக சாலையில் ஆறாக ஓடுகிறது. மலம் கலந்த கழிவுநீர் வெளியேறி வருவதால், அப்பகுதி முழுதும் கடும் துர்நாற்றம் வீசுவதோடு, தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. பாதசாரிகள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பிரச்னைக்குரிய தீர்வு காண வேண்டும்.- தினகரன், சிந்தாதிரிபேட்டை.