புகார் பெட்டி// கழிவுநீர் குழாய் அமைக்க புழுதிவாக்கத்தில் எதிர்பார்ப்பு
புழுதிவாக்கம், அன்னை தெரசா, 20வது தெருவில் கழிவுநீர் குழாய் அமைக்கப்படவில்லை. குறிப்பிட்ட பகுதியில், பாதாள சாக்கடை திட்டப்பணி, 2015ல் துவங்கி, 2019ல் முடிவுற்று, மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.ஆனால், குறிப்பிட்ட தெருவில் பாதாள சாக்கடை தொட்டிகள் மட்டும் அமைத்துள்ளனர். ஆனால், அவற்றை இணைக்கும் குழாய் பதிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தற்போது, அன்னை தெரசா 18, 19வது தெருக்களில், பாதாள சாக்கடை பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.இத்தெருக்களின் கழிவுநீர், 20வது தெரு வழியாகத் தான் வெளியேற வேண்டும். ஆனால், இத்தெருவில் கழிவுநீர் குழாய் அமைக்கப்படவில்லை.எனவே, விடுபட்ட இத்தெருவில் குழாய் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோபிநாத், புழுதிவாக்கம்.