குழாய் உடைந்து வீணாக ரோட்டில் ஓடுகிறது குடிநீர்
குடிநீர் வீண் கவுண்டர் மில்ஸ், ஐ.டி. ஐ., பஸ் ஸ்டாப் பகுதியில், பிரதான குடிநீர் இணைப்பு குழாய் பழுதாகியுள்ளது. பல மாதங்களாக தண்ணீர் சாலையில் ஓடி, சாக்கடையில் வீணாகிறது. பலமுறை புகார் செய்தும், குழாய் உடைப்பை சரிசெய்யவில்லை. - சங்கர் சுப்பிரமணியன், கவுண்டர் மில்ஸ்.தடுமாறும் வாகன ஓட்டிகள் மருதமலை சாலையில் இருந்து கணுவாய் செல்லும் தடாகம் சாலையில், ஜி.சி.டி., தெற்கு நுழைவாயில் அருகே குழி இருந்தது. கான்கிரீட் கலவையால் அந்த குழி மூடப்பட்டது. ஒரு பகுதி மேடாகவும், ஒரு பகுதி குழியாகவும் உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்வோர் தடுமாறி கிழே விழுகின்றனர். - சுந்தரம், கணுவாய்.மோசமான ரோடு திருச்சி ரோடு, சேரன் பிளாசா அபார்ட்மென்ட் அருகே, சுந்தர் டயர்ஸ் எதிர்புறம் இன்டர்நெட் இணைப்பை சரிசெய்வதற்காக, சாலை தோண்டப்பட்டது. பணிகள் முடிந்தும் சாலையை முறையாக சீர்செய்யவில்லை. - ராதாகிருஷ்ணன், திருச்சி ரோடு.நிரம்பி வழியும் சாக்கடை என்.எச். ரோடு, அய்யண்ணன் வீதியில், சாக்கடை கால்வாய் சரியாக துார்வாரவில்லை. பல இடங்களில் கால்வாயில் கழிவுநீர் நிரம்பி வழிகிறது. குடியிருப்பு பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. - ரவி, அய்யண்ணன் வீதி.நோய் பரவும் அபாயம் சிங்காநல்லுார், ஆர்.வி.எல்., மேற்கு காலனியில் சாக்கடை கால்வாய் பல வாரங்களாக துார்வாரப்படவில்லை. கால்வாயில் பிளாஸ்டிக் கவர்கள், வாட்டர் பாட்டில் என அதிக குப்பை உள்ளது. தேங்கி நிற்கும் கழிவுநீரில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. நோய் பரவும் அபாயம் உள்ளது. - செந்தில்குமார்,சிங்காநல்லுார்.அடிக்கடி அடைப்பு திருச்சி ரோடு, மே பிளவர் மெட்சிட்டி காம்ப்ளக்ஸ் முன்புள்ள, சாக்கடை கால்வாயில் வளர்ந்துள்ள பழைய மரம் காய்ந்த நிலையில் உள்ளது. கால்வாயில் மண் சரிந்து விழுவதுடன், அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. மரத்தை பாதுகாப்பாக அகற்றி விட்டு, கால்வாயை துார்வார வேண்டும். - முருகேசன், திருச்சி ரோடு.வரவேற்கும் குப்பை ஜி.என்.மில்ஸ், ஸ்ரீ சூர்யலட்சுமி கார்டன்ஸ் குடியிருப்பு நுழைவாயின் முகப்பு பகுதியில் திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. அருகில் சேகரிக்கும் குப்பையையும் துாய்மை பணியாளர்கள் இங்கே கொட்டி செல்கின்றனர். - சங்கர் சுப்பிரமணியன், ஜி.என்.மில்ஸ்.பாலத்தில் முளைத்துள்ள செடிகள் சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோட்டில், ரத்தினம் பள்ளி அருகே அமைந்துள்ள, மேம்பால பக்கவாட்டு சுவர் இணைப்பில், மூன்று இடங்களில் செடி வளர்ந்துள்ளது. இந்த செடிகள் இரண்டு அடி உயரத்துக்கு மேல் வளர்ந்துள்ளது. பாலத்தை பாதிக்கும் அம்மரங்களை அகற்ற வேண்டும். - முருகநாதன், ராஜம் அவென்யூ.உடைந்த குழாய்கள் சேரன் மாநகர், சூர்யா நகர் பகுதியில் எரிவாயுக் குழாய் பதிப்பு பணிகள் நடந்தன. பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் முன்கூட்டியே அறிவுறுத்தியும், குழாயை உடைத்து விட்டனர். தண்ணீர் வீணாகி வருகிறது; உடைந்த குழாய்களை விரைந்து சரிசெய்ய வேண்டும். - ராஜ்குமார், சேரன் மாநகர்.தெருவிளக்கு பழுது மேற்கு மண்டலம், வீரகேரளம், 40வது வார்டு, அண்ணா நகர்ஹவுசிங் யூனிட் மேற்கு பகுதியில் உள்ள, 'எஸ்.பி., -20, பி - 21' என்ற எண் கொண்ட கம்பத்தில் தெருவிளக்கு பழுதாகியுள்ளது. இரு மாதமாக புகார் செய்தும், இதுவரை நடவடிக்கையில்லை. - முருகேசன், வீரகேரளம்.