உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கோயம்புத்தூர் / சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி; பாதுகாப்பு கேள்விக்குறி

சுற்றுச்சுவர் இல்லாத அங்கன்வாடி; பாதுகாப்பு கேள்விக்குறி

ஓவர் லோடு

வால்பாறையில் இருந்து, பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் வாகனங்கள் அதிக அளவு பாரம் ஏற்றி செல்வதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே பாரம் ஏற்ற வேண்டும். இதை போலீசார் கண்காணித்து, விதிமீறல் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரியா, வால்பாறை.

'டிவைடர்' வைக்கணும்!

பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், ஏழூர் பிரிவு தனியார் திருமண மண்டபம் அருகே உள்ள, 'யு டர்ன்' பகுதியில் அதிகளவு வாகனங்கள் செல்கின்றன. வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இங்கு ரோட்டின் இரண்டு பகுதியிலும் 'டிவைடர்' வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- கிருஷ்ணா, கிணத்துக்கடவு.

வீணாகும் குடிநீர்

கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் இருந்து அண்ணாநகர் செல்லும் இணைப்பு ரோடு அருகே, குழாயில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு நீண்ட நாட்களாக ரோட்டில் வழிந்தோடியபடி உள்ளது. இதனால், ரோடும் சேதமடைகிறது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து சரி செய்ய வேண்டும்.- கண்ணன், கிணத்துக்கடவு.

சிதிலமடைந்த ரோடு

கிணத்துக்கடவு, சொலவம்பாளையத்திலிருந்து ஏழூர் செல்லும் ரோடு சிதிலமடைந்த நிலையில் இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் இந்த வழியில் செல்லும்போது நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும்.-- ரேவந்த், கிணத்துக்கடவு.

சுற்றுச்சுவர் இல்லை

உடுமலை போடிபட்டி அங்கன்வாடி மையத்திற்கு வளாகச்சுவர் இல்லாமல் உள்ளது. இதனால், அங்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அங்கு சுற்றுச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கண்ணன், உடுமலை.

விபத்து அபாயம்

பொள்ளாச்சி, மகாலிங்கபுரம் நுழைவுவாயில் அருகே ரோட்டை கடக்க முடியாத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. வாகனங்கள் நின்று செல்லும் வகையில் சிக்னல் அமைத்தால் மட்டுமே, விபத்து ஏற்படுவதை தடுக்க முடியும். போக்குவரத்து போலீசார் இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும்.- கவுதமன், பொள்ளாச்சி.

சேதமடைந்த ரோடு

உடுமலை, ஸ்ரீநகர் பகுதியில் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. ரோடு மேடும் பள்ளமுமாக இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். மழைநீரும் தேங்குவதால் காலையிலும் அவ்வழியாக செல்வோருக்கு பள்ளம் இருப்பது தெரிவதில்லை.- சுதா, உடுமலை.

சுகாதார சீர்கேடு

உடுமலை, பழைய அக்ரஹார வீதியில் குப்பைக்கழிவுகள் திறந்த வெளியில் கொட்டுகின்றனர். தெருநாய்கள் கழிவுகளை ரோடு முழுவதும் பரப்புகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், குடியிருப்புகளில் மிகுதியான துர்நாற்றமும் வீசுகிறது.- பாலாஜி, உடுமலை.

கால்நடைகளால் அவதி

உடுமலை, உழவர் சந்தை ரோட்டில் கால்நடைகள் தாறுமாறாக உலா வருகின்றன. அவ்வழியாக வரும் பஸ்கள், கனரக வாகனங்கள், கால்நடைகளால் அப்பகுதியை கடக்க முடியாமல் காத்திருக்க வேண்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.- செந்தில்குமார், உடுமலை.

மழை நீர் தேக்கம்

உடுமலை, பழநி ரோடு ஸ்ரீ நகர் சந்திப்பில் பள்ளத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதகுறித்து நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கருப்பசாமி, உடுமலை.

ரோடு ஆக்கிரமிப்பு

உடுமலை வ.உ.சி.வீதியில் ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்களை தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் மற்ற வாகனங்கள் அவ்வழியாக சென்று வருவதற்கு இடையூராக உள்ளது. அருகில் உள்ள அரசு மருத்துவமனையிலிருந்து அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் செல்வதற்கும் முடியாமல் சிக்கல் ஏற்படுகிறது.- நவீன்பிரபு, உடுமலை.

கழிவு நீரால் பாதிப்பு

பொள்ளாச்சி, அன்சாரி வீதி மற்றும் பயோஸ்கோப் ரோடு பகுதிகளில், ஆங்காங்கே ரோடு சேதமடைந்தும் பாதாள சாக்கடையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, பல நாட்களாக ரோட்டில் வழிந்து ஓடுகிறது. இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சி சார்பில் இதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.-- ஜெயபிரகாஷ், பொள்ளாச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி