உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி - கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி - கள்ளக்குறிச்சி

தொடர் மின்வெட்டால் அவதி

கச்சிராயபாளையம் சுகர் மில் அருகே உள்ள அசேபா நகர், ஓடைக்காடு பஸ்நிறுத்தம், கட்டுக்கரைமேடு பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதால் மக்கள் சிரமமடைந்து வருகின்றனர்.குமார், கச்சிராயபாளையம்.

கழிவறை சுத்தம் செய்யப்படுமா?

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பொது கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதால், பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.விக்கி, கள்ளக்குறிச்சி

கொசுவால் சுகாதார சீர்கேடு

கள்ளக்குறிச்சி அபிராமி அபார்ட்மெண்ட் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி இடத்தில் மழைநீருடன் கழிவுநீர் சேர்ந்து தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.பரணி, கள்ளக்குறிச்சி.

போக்குவரத்து நெரிசல்

கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பு அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மதில் சுவர் அருகே 'நோ பார்க்கிங்' பகுதியில் கார் மற்றும் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இளையராஜா, கள்ளக்குறிச்சி.

விஷ ஜந்துக்களால் அச்சம்

கள்ளக்குறிச்சி பயணியர் விடுதி பின்புறம் ராஜா நகரில் புதர் மண்டிக் கிடப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் உலாவுவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.ஞானவேல், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை