உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / கள்ளக்குறிச்சி / புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

புகார் பெட்டி கள்ளக்குறிச்சி

பயன்பாடில்லாத பொது சுகாதார வளாகம்

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராமன், கருணாபுரம்.

ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். -கணேசன், உளுந்துார்பேட்டை.

இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம்

மடப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டுவதால் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. -முனுசாமி, மடப்பட்டு.

வாகன ஓட்டிகள் அச்சம்

கள்ளக்குறிச்சி கோட்டைமேடு அருகே சாலை வளைவு பகுதியில் மின் விளக்குகள் இல்லாதாதல் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். -பிரசாந்த், கள்ளக்குறிச்சி.

இரு சக்கர வாகனங்களால் நெரிசல்

கள்ளக்குறிச்சி, கச்சேரி சாலையை அடைத்தவாறு நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. -ஹரிராமன், கள்ளக்குறிச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை