மேலும் செய்திகள்
எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டில் குவியும் குப்பை
28-Jun-2025
ஸ்ரீபெரும்புதுார் நகராட்சி, சுபத்ரா நகர் பகுதியில் 500க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் அருகே உள்ள கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலையோரம் குளம் போல தேங்கி உள்ளது.இதனால், இப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் சூழல் அதிகரித்து உள்ளது. மேலும், தேங்கியுள்ள கழிவுநீரில் கொசு உற்பத்தி அதிகரித்து உள்ளதால், இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, சாலையோரம் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சு.தர்மலிங்கம், ஸ்ரீபெரும்புதுார்.
28-Jun-2025