மேலும் செய்திகள்
ஆத்துப்பாக்கம் கிராமத்தில் இருளில் மூழ்கும் சாலை
11-Mar-2025
புள்ளலுார் -- -கணபதிபுரம் இடையேமின் விளக்கு வசதி தேவை காஞ்சிபுரம் மாவட்டம், புள்ளலுார் கிராமத்தில் இருந்து, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியம், கணபதிபுரம் கிராமம் வரையில், ஒரு கிலோ மீட்டர் துார சாலை உள்ளது.இந்த சாலை வழியாக, புள்ளலுார் சுற்றியுள்ள அரங்கநாதபுரம், பள்ளம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமத்தினர், கணபதிபுரம் கிராமம் வழியாக சேந்தமங்கலம், தக்கோலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இதுபோன்றவர்கள், மின் விளக்கு வசதி இன்றி இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. இதை தவிர்க்க, இரு மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி நிர்வாகங்கள் தங்களின் எல்லை பகுதிகளில் மின் கம்பங்கள் அமைத்து தெரு விளக்கு போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஆர்.சந்திரன்,கணபதிபுரம்.
11-Mar-2025