காஞ்சிநும்: புகார் பெட்டி; சேதமான சாலை சீரமைக்க வலியுறுத்தல்
சேதமான சாலை சீரமைக்க வலியுறுத்தல்
கா ஞ்சிபுரம் மேட்டுத்தெருவில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதற்காக மாநகராட்சி சார்பில், பள்ளம் தோண்டப்பட்டது. இருப்பினும் சேதமான சாலையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை சேதமான பகுதியில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத அப்பகுதியில் அதிகளவு விபத்து நடப்பதாக பகுதிமக்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, பாதாள சாக்கடை இணைப்புக்காக சேதப்படுத்திய சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.ராமசந்திரன், காஞ்சிபுரம்.