/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம் : புகார் பெட்டி; நுாலகத்தை சூழ்ந்த செடிகள் அகற்ற கோரிக்கை
காஞ்சிபுரம் : புகார் பெட்டி; நுாலகத்தை சூழ்ந்த செடிகள் அகற்ற கோரிக்கை
செடிகள் சூழ்ந்த நுாலகம் காஞ்சிபுரம் அடுத்த, ஆலப்பாக்கம் கிராமத்தில், நுாலகம் இயங்கி வருகிறது. இந்த நுால கத்தில் இருக்கும், நுால்களை படிக்க கிராம மக்கள் வந்து செல்கின்றனர். இரு ஆண்டுகளுக்கு முன் கட்டடத்திற்கு பெயின்ட் அடித்து புதுப்பிக்கப்பட்டது. ஓராண்டாக கட்டடத்தை ஊராட்சி நிர்வாகம் போதிய பராமரிப்பு செய்யாததால், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. இந்த நுாலகத்திற்கு வரும் மக்கள் அச்சத்துடன் விஷக்கடிகளுக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. - பி.நாராயணன், காஞ்சிபுரம்.