/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உடற்பயிற்சி கூடத்தை புதுப்பிக்க கோரிக்கை
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உடற்பயிற்சி கூடத்தை புதுப்பிக்க கோரிக்கை
சேதமடைந்த உடற்பயிற்சி கூடம் உ த்திரமேரூர் பேரூராட்சியில், அரசு முன்மாதிரி நடுநிலைப் பள்ளி அருகே, உடற்பயிற்சி கூடம் உள்ளது. இந்த உடற்பயிற்சி கூடம், 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, கட்டடம் முறையாக பராமரிப்பு இல்லாமல், கான்கிரீட் கூரை சேதமடைந்து உள்ளது. மழை நேரங்களில் கூரையில் இருந்து, மழைநீர் வழிந்து பக்கவாட்டு சுவர் ஈரமாக மாறுகிறது. இதனால், உடற்பயிற்சி கூடத்திற்கு வருபவர்கள், கட்டடம் இடிந்து விழும் என்கிற அச்சத்தோடு வந்து செல்கின்றனர். எனவே, சேதமடைந்துள்ள உடற்பயிற்சி கூடத்தை புதுப்பிக்க, துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.நாராயணன், உத்திரமேரூர்.