/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?
காஞ்சிபுரம்: புகார் பெட்டி; மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?
மின் கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்படுமா?
வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகே, வினோபா நகருக்கு செல்லும் குறுக்குத் தெரு உள்ளது. இந்த தெருவில், கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு ஒயர் பொருந்திய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதில், ஒரு மின் கம்பத்தில், வளர்ந்து படர்ந்து உள்ள செடி, கொடிகள், மின் கம்பிகளை சூழ்ந்து உள்ளது.தற்போது, கோடைக்காலம் என்பதால், அச்செடிகள் காய்ந்து கருகி, மின் கசிவால் தீ விபத்து ஏற்படுத்தும் ஆபத்தான நிலை உள்ளது.எனவே, அந்த மின் கம்பத்தின் மின் கம்பிகளை சூழந்த செடி, கொடிகளை அகற்றி, விபத்து அபாயத்தை தவிர்க்க மின் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பி. மணிகண்டன்,வாலாஜாபாத்.