உள்ளூர் செய்திகள்

/ புகார் பெட்டி / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உத்திரமேரூர் பூங்கா பராமரிக்கப்படுமா?

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; உத்திரமேரூர் பூங்கா பராமரிக்கப்படுமா?

உத்திரமேரூர் பூங்கா பராமரிக்கப்படுமா?

உத்திரமேரூர் பேரூராட்சி, செல்லம்மாள் நகரில், 2023ல், 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 34 லட்சத்து 72,000 ரூபாய் செலவில் பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்காவை அப்பகுதி மக்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி நிர்வாகம் பூங்காவை முறையாக பராமரிக்காததால், பூங்கா வளாகம் மற்றும் சிமென்ட் கல் பதித்த நடைபாதையில் புல் வளர்ந்துள்ளது. இதனால், பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, செல்லம்மாள் நகரில் உள்ள பூங்காவை பராமரிக்க, உத்திரமேரூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.சுரேஷ்குமார், உத்திரமேரூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை