புகார் பெட்டி சாலையோரம் குவிந்துள்ள மண் திட்டுகளால் விபத்து அபாயம்
வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் நாளொன்றுக்கு பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் ஒரகடம் மேம்பாலம் அருகே, சாலையோரம் மண் அதிக அளவில் குவிந்து உள்ளது.வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மண் திட்டுகளின் மீது செல்லும் போது, சறுக்கி விழுந்து காயமடைகின்றனர்.எனவே, சாலையோரம் குவிந்துள்ள மண் திட்டுகளை அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- து. பாலாஜி,ஒரகடம்.